Thursday, February 24, 2011

நாய்கள் நம்மை இகழாதிருக்க வேண்டுமென்றால்...

நான் படித்தது. நீங்களும் படிக்கலாம் 


 நாம் கடவுளை வணங்காவிட்டால் அவருக்கு குறை ஏற்படுமா?

கடவுள் மனிதனை படைத்தார். விலங்குகளையும் மற்ற உயிரனங்களையும் படைத்திருக்கிறார்.

நமக்கு பசி, தாகம், காமம், தூக்கம் எல்லாமே உண்டு. விலங்குகளுக்கும் இவைகள் உண்டு.

மனிதர்களை போலவே விலங்குகளும் உழைத்து சாப்பிடுகிறது. இனவிருத்தி செய்கிறது.

ஆனாலல் கட்டுபாடு, ஒழுக்கம், தர்ம நெறி, பகுத்தறிவு என்பனயெல்லாம் அவைகளுக்கு கிடையாது.

எந்த ஆடும், மாடும் உடலை மறைக்க ஆடை அணிவதில்லை.

காதலியை பார்க்க கால் கடுக்க காத்திருப்பதும் இல்லை.

வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு ஈட்டிக்காரனை கண்டு ஓடி ஒளிவதும் இல்லை.

மனிதனுக்கு தான் இத்தனை சுமைகள். மான அவமான உணர்வுகள், மனம் என்ற ஒன்றும் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மனம் உள்ளதனால் தான் நம்மை மனிதன் என்று அழைக்கிறார்கள்.

அந்த மனம் தான் நாலா விஷயங்களையும் சிந்தித்து பார்க்க வைக்கிறது. பால் கொடுத்து வளர்த்த பிள்ளை சோறு போடாத போதும் வாழ்த்த சொல்கிறது.

மருமகளாக வந்து விட்டால் அவள் சோறு போட்டாலும் கூட அவளை அந்நியமாகவே பார்க்க சொல்கிறது.

செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக எதாவது செய் என சொல்லவும் வைக்கிறது.

நமக்கு உயிர் தந்தவன் கடவுள். உடல் தந்தவன் கடவுள். அறிவு தந்தவனும் அவன் தான். அவனை நாம் வணங்காவிட்டால் அவனுக்கு ஒன்றும் குறைவு கிடையாது.

நாக்கு உணவை சுவைக்கிறது. உணவை மென்மையாக்கி பற்கள் கொடுக்கிறது.

மூக்கு சுவாசிக்கிறது. சுவாச காற்றுடன் தூசிகள் நுரையீரலுக்குள் செல்லாமல் மூக்கு ரோமங்கள் பாதுகாக்கின்றன.

காட்சிகளை பார்க்கும் கண்ணை பாதுகாக்க இமையிருக்கிறது.

இத்தனையும் காரண காரியம் அறிந்து கொடுத்த இறைவனை தொழாத கைகள் இருந்தென்ன? இல்லாவிட்டால் என்ன ?

நன்றி கெட்டவன் மனிதன் என நாய்கள் நம்மை இகழாதிருக்க வேண்டுமென்றால் கடவுள நாம் வணங்கித் தான் தீர வேண்டும். இதில் அவனுக்கு பெருமை இல்லை. நமக்கு தான் பெருமை.

No comments: