Tuesday, May 31, 2016

குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்


உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.
அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்
குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது.
எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??
உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
வியக்கவைக்கிறதா... !

நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.
பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்Thursday, May 26, 2016

மருத்துவக் குறிப்புகள

1. கண் எரிச்சல் தீர:
நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும்.
2. ரத்தக்கொதிப்பு குணமாக:
நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு அந்தச்சாற்றை எடுத்து அருந்தி வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
3.தொண்டைக் கட்டு நீங்க:
சுக்கை எடுத்து வாயில் இட்டு, மெல்ல உமிழ்நீரில் ஊறவைத்து அந்நீரைக்குடித்து வந்தால் தொண்டைக்கட்டு நீங்கும்.
4. சுளுக்கு வலி தீர:
புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால் சுளுக்கு வலி குணமாகும்.
5.நரம்பு பலம் பெற:
சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.
6. வயிற்றுப்புண் தீர:
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டு செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
7.வயிற்றுவலி குணமாக:
அகத்திக்கீரையை நன்கு வேக வைத்துத் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.
8. இடுப்புவலி தீர :
வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்புவலி குணமாகும்.
9. உடல் பருமன் குறைய:
பொன்னாவரைக் கீரை விதையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
10. முடி நன்கு வளர:
காரட், எலுமிச்சைப் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர முடி நான்கு வளரும்.
வாழைக்குறுத்தைப் பிரித்துச் சுட்ட தீப்புண் மீது கட்டினால் தீப்புண் கொப்பளங்கள் குணமாகும்.
======================================================
1. உடல் பலவீனம் நீங்க : பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும்.
2. ரத்தம் சுத்தம் பெற : தினமும் அருகம்புல் பானம் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த விருத்தியும் உண்டாகும்.
3. வயிற்றுபுண் குணமாக :மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்னும், வயிற்றுப்புண்னும் குணமாகும்.
4. மூல நோய் தீர : புங்க மரத்துப் பட்டையை வேகவைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூலம் குணமாகும்.
5. இதய நோய் தீர : மூன்று திராட்சைப் பழத்தை வெந்நீரில் ஊறவைத்து, சாறு எடுத்து சம அளவு துளசிச் சாற்றை இதோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்,படபடப்பும் குறையும்.
6. நரை முடி கருப்பாக: முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை குறையும்.
7. உடல் வலிமை பெற: வேப்பம்பூவை கசாயம் வைத்துக் குடித்து வந்தால் உடல் வலிமை பெரும்.
8. பற்கள் கெட்டி பெற; மாவிலையில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களின் ஈறுகள் கெட்டிப்படும்.
9. ரத்த அழுத்தம் குறைய: தினமும் மீன் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் குறையும்.
10. உதிரப்போக்கு நிற்க: குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, 1 தேக்கரண்டி சீரகம் சேர்ந்து அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர ரத்தப் போக்கு நிற்கும்.
11. காசநோய் தீர: தினமும் உணவில் அன்னாசிப் பழம் சேர்ந்து சாப்பிட்டு வர காச நோய் தீரும்.
12. கண்பார்வை தெளிவடைய: இரண்டு முந்திரிப் பருப்பு, 1 தேக்கரண்டி கசகசாவை அரைத்துப் பாலில் கலக்கிக் காலை வெளியில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும், சருமமும் மினுமினுப்பாகும்.
13. வெட்டுக்காயம் குணமாக: கண்ணாடித்துண்டால் நம் உடலில் காயம் ஏற்ப்பட்டால், வாழைப்பழத்தை அந்தக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால் ரத்தப் போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
=========================================
1.வழுக்கைத் தலையில் முடி வளர :
வெங்காயத்தை செம்பருத்திப் பூவுடன் சேர்த்து அரைத்து, வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
2. வெட்டுக்காயம் ஆற:
வசம்புத் தூளைக் காயத்தின் மீது தூவினால் வெட்டுக்காயம் ஆறும்.
3. வயிற்றுப்புண் குணமாக:
தினமும் 1 குவளை திராட்சைப் பழச்சாறு அருந்தி வர வயிற்றுப்புண் குணமாகும்
4. மார்புச்சளி தீர:
ஏலக்கைப் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச்சளி தீரும்.
5. சிறுநீர் கோளாறு நீங்க:
முலாம்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.
6. காதுவழி குணமாக:
ஊமத்தம் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வழி குணமாகும்.
7. உடல் சூடு குறைய:
தினமும் ஆட்டுப்பால் அருந்திவர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.
8. முகத்தில் உள்ள கட்டிகள் குணமாக:
முகத்தில் அடிக்கடி சந்தனம் குழைத்துப் பூசிய பின் அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள கட்டிகள் குணமாகும்.
9. கண்குளிர்ச்சி பெற:
கருவேப்பிலைத் துவையல் உண்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும். தவிர வாழை இலையில் சோறு சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும்.
10. மஞ்சள் காமாலை தீர:
கீழாநெல்லி இலையை நன்கு அரைத்துப் பாலுடன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
11. உணவு செரிக்க:
வெற்றிலையில் இரும்புச்சத்தும், ஜீரணச்சத்தும் உள்ளது. ஆதலால் உண்டபின் வெற்றிலை போடுவது நல்லது.
12. ரத்தம் சுத்தம் பெற, ரத்தம் விருத்தியாக:
தினமும் அருகம்புல் பானம் அருந்தி வந்தால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த விருத்தி உண்டாகும். உள்வெளிப் புண்கள் ஆறும்.
============================================
1. பல்வலி, பல் நோய் தீர:
ஆலமரத்துப் பட்டையை மை போலப் பொடி செய்து கொள்ளவும். நீரைக் கொதிக்க வைத்த பின் இதோடு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று மாதம் சாப்பிட்டு வர பல்நோய் குணமாகும்.
2.கண் பார்வை தெளிவடைய:
பாதாம் பருப்பை வறுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
3.வேர்க்குரு நீங்க:
வடித்த கஞ்சியின் சூடு ஆறிய பின், உடலில் தடவி குளிர் நீரில் குளித்து வந்தால் வேர்க்குருத் தொல்லை தீரும். அல்லது வெங்காயத்தை இடித்துச் சாறாக்கி வைத்துக்கொண்டு, இதனுடன் பப்பாளிப் பாலை கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் வேர்க்குரு தொல்லை தீரும்.சருமமும் பளபளப்பாகும்.
4.வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் குணமாக:
நம் உடலில் உள்ள சூட்டைத் தனித்து குளிர்ச்சி தரக்கூடியது நாவற்பழம்.இப்பழத்தை வாயுத்தொல்லை உள்ளவர்களும், வயிற்றில் புண் உள்ளவர்களும் தொடர்ந்து உண்டு வந்தால் இப்பிரச்சனை தீரும்.
5.அஜீரணத் தொல்லை தீர:
சிறு குவளை நீரில் கருவேப்பிலை, சீரகம், இஞ்சி இம்மூன்றையும் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின், அதை ஆறவைத்து, இந்நீரை வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் சரியாகும்.
6.வலிப்பு நோய் தீர:
வலிப்பு நோய் உள்ளவர்கள் வெள்ளை வேங்காயத்தை நன்கு நசுக்கிய பின் ஒரு துணியில் கட்டிப் பிழிந்து சாறு எடுத்து, இந்தச் சாற்றை இரண்டு காதுகளிலும் ஊற்றினால் வலிப்பு உடனே குணமாகும்.
7.மனக் கோளாறு குணமாக:
மனப்பிரச்சனை உள்ளவர்கள் ஓராண்டுக்கு இரண்டு முறை தங்களது கைகளில் மருதாணி அரைத்துப் பூச வேண்டும். இவ்வாறு கை.கால்களில் மருதாணி இடுவதினால் உங்களுக்கு வரும் னக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
8.நெஞ்சுவலி குணமாக:
நெஞ்சுவலி உள்ளவர்கள் தினமும் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.
9. முகச்சுருக்கம் நீங்க:
முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, மிருதுவான பஞ்சை இவ்வெள்ளைக் கருவில் தோய்த்து முகம், கழுத்தில் தடவிய பின் அரைமணி நேரம் கழித்து ஈரப்பஞ்சினால் துடைத்து வந்தால் முகச்சுருக்கம் தீரும்.
10. மூட்டு வலி தீர:
அத்தி மரத்துப் பாலை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் மூட்டு வலி தீரும்.
11. சளித்தொல்லை தீர:
இஞ்சிச் சாற்றையும், துளசிச் சாற்றையும் சம அளவு எடுத்து, இவ்விரண்டையும் நன்கு கலந்து குடித்து வந்தால் சளித்தொல்லை தீரும்.

Tuesday, May 24, 2016

மா விளக்கு ஏற்றுவது ஏன்?மனம் எனும் அஞ்ஞான இருளை அகற்றி ஞானம் எனும் ஒளிச்சுடரை ஏற்றி ஒளி வடிவமான இறையை நினைவுறச் செய்வதற்கு வீட்டிலும், குல தெய்வக் கோவில்களிலும் நம் முன்னோர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டார்கள்.

உலகில் உள்ள உயிர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அன்னம் (அரிசி) நிலத்தையும், இனிமை அல்லது ஆனந்தமாகக் கருதப் பெறும் வெல்லத்தையும் (ஆகாயம்) சேர்த்து நெய் (நீர்) யில் வாசம் செய்யும் அக்கினி பகவானை (வேள்விகளில் அவிர் பாகங்களை அந்தந்த தேவதைகளிடம் சமர்ப்பிக்கும் அக்கினி) வாயுவின் துணை கொண்டு எரியச் செய்து ஐம்பூதங்களையும் நினைவுறவும், ஐம்பூதங்களோடு இயைந்த வாழ்வு வாழ வேண்டும் என்பதையும்,  நம் உடம்பில் ஐம்பூதங்களின் செயல்பாடும் உண்டு அவற்றில் ஒன்று போனாலும் நாம் உடலம் சடலம் ஆகும் என்பதை உணர்ந்து உடலையும் உயிரையும் பேணுதற் பொருட்டும் மாவிளக்கு ஏற்றப் பெறுகிறது.

அரிசி வெல்லம் நெய் துணை கொண்டு எரியும் சுடர் விடும் புகை துர்சக்திகள், எதிர்மறை அலைகள், நுண்கிருமிகள் அனைத்தையும் அகற்றும் வல்லமை பெற்றது.

மேலும் பஞ்ச கோசங்களை இவ்வழிபாடு நினைவுபடுத்தும்.

மாவிளக்கு உணர்த்தும் பஞ்ச கோசங்கள்

தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிரணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் ஆனந்தம் பிரம்மணோ வியஜானாத் (ஆனந்தமே பிரம்மம் என அறிக) என முடியும்.

மனித வாழ்வையும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் பற்றிச் சிந்திக்க விரும்புபவர்களுக்குப் பல விஷயங்களை அள்ளித் தருவது வேதாந்தம். ஆத்மா, பிரம்மம் ஆகிய விஷயங்கள் பற்றியும் உபநிடதங்கள் ஆழமாகப் பேசுகின்றன.

உபநிடத சிந்தனைகள் ஆத்மாவைப் பற்றி விளக்குவதற்கு முன்பு நம் உடலைப் பலவாறாகப் பகுக்கின்றன. மனித உடலை ஐந்து கோசங்களாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்ரிய உபநிடதத்தில் வருகிறது.

பஞ்ச கோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை; பஞ்ச என்றால் ஐந்து. அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள். இவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அன்னமய கோசம் (அரிசி அன்னம்)

நம் ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. இதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்துகிறது.

பிராணமய கோசம் (மாவிளக்கில் உள்ள அக்கினியை எரிய உதவும் காற்று)

வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவ்சியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமய கோசம் என வகைப்படுத்தப் படுகின்றன.

மனோமய கோசம் (உருண்டையாக உருட்டப்பெற்ற மாவிளக்கு)

உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம் எனப்படும்.

விஞ்ஞானமய கோசம் (நெய்யும் நெருப்பும் நெருப்பு எரிய எரிய நெய் தீர்நது விடும்.  நெய் தீர்ந்தால் திரி எரிந்து சாம்பலாகும்)

எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது நிலைக்காது, எது நிலைக்கும்? இதுபோன்ற தர்க்க ரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும்.

ஆனந்தமய கோசம் (வெல்லம் அரிசியுடன் ஒன்று சேர்நது நிலைமாறித் தோன்றும் வெல்லம் இனிப்பைத் தந்து ஆனந்தம் நல்கும்)

ஆனந்தமய கோசம் என்பது இந்த அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் என்று சொல்லலாம்.

மனித வாழ்வு என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியது. ஐந்தாவது கோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரே உடலின், ஒரே வாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே அணுகிப் புரிந்துகொள்ளலாம்.

எல்லாமே சேர்ந்ததுதான் நம் வாழ்வு என்பதையும் எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பது இதன் உட்பொருள்.

தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் பிரசன்னமாகி அருள்புரிகின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்பெறுகிறது.

Sunday, April 10, 2016

பார்க்கின்சன் நோயை வெல்ல…


கார்ப்பரேட் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் கிருபா பாபு. எப்போதும், வேலை வேலை என மும்முரமாகப் பணியாற்றியவர். தன்னுடைய உடலில் வேகம் குறைந்திருப்பதை உணர்ந்தார். தொடக்கத்தில் வயது அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னை என்று சாதாரணமாக விட்டுவிட்டார். ஆனால், நாளாக ஆக உடலின் இயக்கம் மிகவும் மோசம் அடைந்தது. காரில் இருந்து இறங்கும்போதுகூட,
முன்பைவிட அதிக நேரம் தேவைப்பட்டது. சில நாட்களுக்குப் பின், வலது தோள்பட்டையில் மிகவும் இறுக்கமாக உணர்ந்தார். 2008-ம் ஆண்டு மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு பார்க்கின்சன் நோய் (நடுக்குவாதம்) இருப்பது தெரியவந்தது.
`பார்க்கின்சன் நோயை, மாத்திரைகள் மூலமாகவே குணப்படுத்திவிடலாம்’ என மருத்துவர் தெரிவிக்க, 2015-ம் ஆண்டு வரை மாத்திரைகள் உட்கொண்டு வந்திருக்கிறார். அதனால் எந்தப் பயனும் இல்லை. இதற்கு சிகிச்சையே இல்லையா எனத் தேடும்போது, சென்னையில் ஒரு மருத்துவமனையில் இதற்கு சிகிச்சை இருப்பதைக் கண்டறிந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை வந்தார்.
சென்னை வரும்போதே அவரது உடலின் இயக்கம் மிகக் கடுமையாகக் குறைந்துவிட்டது. கழிப்பறைக்குச் செல்வதற்குக்கூட அடுத்தவரின் உதவி தேவைப்பட்டது. அவரால் சுயமாக எந்த வேலையையுமே செய்ய முடியவில்லை. இதனால், கண்டிப்பாக உடனே சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற நிலை. அவருக்கு ஆழ் மூளைத் தூண்டல் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, மற்றவர்களைப்போல தன்னுடைய வேலையைத் தானே செய்யும் அளவுக்கு நிலைமையில் முன்னேற்றம்.


இது குறித்து மூளை, நரம்புமண்டல அறுவைசிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவர் ஹல்பிரசாந்த் கூறுகையில், “இதயத்துக்கு எப்படி பேஸ்மேக்கர் கருவி பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோன்று மூளைக்குப் பொருத்துவதுதான் ஆழ் மூளைத் தூண்டல் சிகிச்சை (Deep brain stimulation (DBS)). கிருபா பாபுவுக்கு மாத்திரைகள் எந்தப் பலனையும் அளிக்காததால், 2015-ம் ஆண்டு, அவர் எங்களைச் சந்தித்தார். சிகிச்சைமுறை குறித்து, அவருக்கு விளக்கினோம். மூளைக்குள் மின்முனை செலுத்தப்படுவதால், முதலில் அவரது மனைவி சிகிச்சைக்குத் தயங்கினார். பின், கிருபா பாபுவின் நிலையைக் கண்டு சிகிச்சைக்குச் சம்மதித்தார்.
சிகிச்சையின்போது, முதலில், சி.டி ஸ்கேன் செய்து, தலைக்கும், சப் தாலமஸ்க்கும் உள்ள தூரத்தை அளவிட்டோம். பின்னர், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலமாக, கிருபா பாபுவின் மூளையில், மின்முனை பொருத்தப்பட உள்ள சப்-தலாமிக் நியூக்ளியஸ் பகுதியைக் கண்டறிந்தோம். பின்னர், தலையில் சிறுதுளையிட்டு, தலையைச் சுற்றி, ஒரு ஃப்ரேம் (Frame) பொருத்தி, சி.டி ஸ்கேன் மூலமாக, மின்முனையை, சப்-தலாமஸ் பகுதியில் செலுத்தினோம். பின்னர், மின்முனையின் அதிர்வுகளைப் பதிவு செய்தோம். அதாவது, கிருபா பாபுவின் கை, கால் அசைவுகளையும், கண் விழியின் அசைவுகளையும் சோதித்துப் பார்த்தோம். அசைவுகளில் முன்னேற்றம் தெரிந்ததால், மறுபடியும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து, மின் முனை, சரியாக சப்-தலாமஸ் பகுதியில் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டோம். இதுவரை கண்விழித்துக்கொண்டிருந்த கிருபா பாபுவுக்கு, மயக்க மருந்து அளித்து, வலதுபுறம் உள்ள காலர் எலும்பின் கீழ்ப்பகுதியில் இருக்கும், சதையின் பின்னால் பேஸ்மேக்கரைப் பொருத்தி, அதை மின்முனையுடன் இணைத்தோம். இந்த சிகிச்சை, ஆறு முதல் ஏழு மணி நேரம் நீடித்தது. இந்த சிகிச்சை முடிந்து, ஏழு முதல் எட்டு மாதங்கள் கிருபா பாபு மாத்திரைகள் உண்டுவந்தார். இப்போது, மீண்டும் பழையநிலைக்குத் திரும்பி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் பேர் பார்க்கின்சன் போன்ற மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்படுகின்றனர். பார்க்கின்சன் என்பது மூளை நரம்பு மண்டலம் சிதைவால் ஏற்படும் நோய். மூளையில் உள்ள டோபமைன் எனும் ரசாயனக் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த நோயைக் கண்டறிய குறிப்பிட்ட சோதனைமுறைகள் ஏதும், இதுவரை உருவாக்கப்படவில்லை. ஒருவருக்கு, பார்கின்சன் நோய் இருப்பது தெரியவந்தால், குறைந்தது நான்கு முதல் ஐந்து வருடங்கள் அவருக்கு, மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அளித்து குணமாகிறதா எனக் கண்காணிக்க வேண்டும். மருந்துகள் மூலமாகவே 60-70 சதவிகிதத்தினர், இந்த நோயில் இருந்து விடுபடுவர். மீதம் உள்ள 30 சதவிகிதத்தினருக்குத்தான் ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது”என்றனர்.


பார்க்கின்சன் அறிகுறிகள்
*கை அல்லது கை விரல்கள் நடுக்கம்.
*உடல் இறுக்கம்.
*பேச்சில், நடையில் தடுமாற்றம்.
போன்றவை பார்கின்சன் நோய்க்கான அறிகுறிகள். தொடக்கத்தில், மிகவும் லேசாக இருக்கும் நடுக்கம், சில மாதங்களில் தீவிரமாகிவிடும். கை மற்றும் கால்களின் ஒரு பக்கத்தில் மட்டும் இயக்கமும் அசைவுகளும் குறைந்து, நடக்கவோ, கைகுலுக்கவோ சிரமப்படும் நிலை ஏற்படும். இவை பார்கின்சன் நோய் தீவிரமாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள்.


Thursday, April 7, 2016

திசைகளும் தீபங்களும்நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற  வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ?

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன்மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே  ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.

சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள  முகத்தை ஏற்ற வேண்டும்.

தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாதுஎதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

திரியில்லாமல் தீபம் ஏது?
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா?

சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.

முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள  வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில்  விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.

தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட  புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரியும்?

எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்...?
நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள்  நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே?

ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று.

கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் 

வேப்பெண்ணை தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது 
மணக்கு எண்ணை தீபம்.

எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது;
நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் 
எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை,
இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய்நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து  விளக்கேற்ற வேண்டும்.

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு  ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும்பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.


எண்ணெய்க் குளிப்பு!

எண்ணெய்யை சாதாரணமாக பலர் நினைத்துள்ளனர் தண்ணீரைப் போல். அரபு நாடுகள் இன்று தலை நிமிர்ந்து நிற்க காரணம் எண்ணெய்.

தண்ணீரும் ஒரு அரிய பொருளாகப் போகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கங்கை நதி, சீனாவின் வடக்குப்பகுதியிலுள்ள நதி மற்றும் மெக்சிகோ,
ஜோர்டான், அரேபியா, அமெரிக்காவின் தென் பகுதியிலுள்ள நதிகள் எல்லாம் ' என்றும்
வற்றாத ஜீவ நதிகள்' என்று கூறப்பட்டது. கங்கை போன்ற நதிகளின் நீர் நிலைவற்றிக்
கொண்டிருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடுமையான தண்ணீர்
பஞ்சம் வரப்போகிறது. குடி நீர் கிடைக்காது. உலகத்தில் மிகப்பெரிய நதியான நைல்
நதியைப் போல் 20 நைல் நதிகள் அளவு தண்ணீர் வந்தால்தான் மக்களை காப்பாற்ற முடியும்.

இனி எண்ணெய்:

ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.
திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.
செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்
புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.
வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.
வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.
சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.

*
மேற்கண்டவை யாவும் பெண்களுக்கு. ஆண்கள் சனி , புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது

*
ஆண்களுக்கு, திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்
செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.
விழாயக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.
வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.

[
இதனை.'' அறப்பளீகர சதகம் '' கூறுகிறது.]

*
இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் - அல்லது நினைக்கும் இணைய
அன்பர்கள் தனக்கு தேவையான - தனக்கு வேண்டிய நாட்களை தேர்தெடுத்துக் கொள்ளவும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் பலன் இணைய அன்பர்கள் பலரும் அறிந்திருப்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.

நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விட
அறிவினையும், உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள் - மதித்தார்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.
வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்.

எண்ணெய் என்று வரும் போது அதன் தொடர்பான வேறு சில விழயங்களையும் இத்துடன்
இணைத்துவிடுகிறேன்.

திசைகளும் - தீபங்களும்:

நெய்:
தீபத்திற்கு [விளக்கிற்கு] நெய்விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்திற்கும் - இல்லறத்திற்கும் நலனை தருகிறது.

நல்லெண்ணெய்:
நல்லெண்ணெயில் தீபமிடுவதால் சகல பீடைகளும் விலகிவிடும்.

விளக்கெண்ணெய்:
தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், சுற்றத்தார் சுகம், தாம்பத்திய சுகம் விருத்தி செய்கிறது.

திரியின் வகையில் பஞ்சு இலவம் பஞ்சு திரித்துப் போடுவது மிகவும் நல்லது.

தாமரைத் தண்டு:
தாமரை தண்டு திரிந்து ஏற்றுவது முன் வினைப் பாவத்தைப் போக்கும். செல்வம் நிலைத்து நிற்கும்.
[
வாழை தண்டில் திரியிலிடுவது சிறப்பு]

துணி:
புது வெள்ளை துணியில் [அல்லது வெள்ளை வேட்டி] பன்னீரில் நனைந்து காய வைத்து திரியாக பயன் படுத்த உத்தம பலனை காணலாம்.

திசைகளும் பலனும்

கிழக்கு
கிழக்கு திசை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் , பீடைகள் அகலும்.

மேற்கு:
மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை , சனி பீடை, கிரக தோஷம் நீங்கும்.

வடக்கு:
வட திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத் தடையும், சுபகாரியத் தடை,
கல்வி தடை நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.

வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து தீபமிடுவதனால் செல்வம் உண்டாகும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேய்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய் சேர்கையில் 45 நாட்கள் பூசை செய்கிறோரோ அவருக்கு தேவியின் அருள் சக்தி உண்டாகும்.

இறைவனுக்கு உகந்த எண்ணெய்:

மஹாலட்சுமி : நெய்.