Tuesday, February 22, 2011

இந்த ஆடம்பரம் வேண்டுமா...?



   தேர்த் திருவிழாக்கள், திருவிளக்கு பூஜைகள் போன்ற ஆன்மீக விஷயங்கள் அரசியல் மாநாடு போல் பெரிய அளவில் விளம்பரபடுத்தி நடத்த படும் போது இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா என பலருக்கும் தோன்றும் 

உப வேதங்கள் என்று அழைக்கப்படும் உபநிசதங்கள் வேதங்களை விட மிக சிறப்பான கருத்துக்களை சொல்லியிருக்கின்றன. 

யுத்த களத்தில் சோர்வடைந்து கிடந்த அர்ஜூனனுக்கு உபநிசத கருத்துக்களை அப்படியே எடுத்து கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? அர்ஜூனன் குருஷேத்திரத்தை விட்டு ஓடிபோயிருப்பான்

எதை, எப்படி சொல்ல வேண்டும் என்ற ஒரு நியதியிருக்கிறது. அதை அப்படி சொன்னால் தான் சரியாகயிருக்கும். 

உண்பதும், குடிப்பதும், உறங்குவதுமாக சில மாடுகள் இருக்கும். அதை போலவே சில மனிதர்களும் உண்டு. 

அவர்களை பார்த்து மாடு மாதிரியிருக்கிறாயே என்று சொன்னால் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.

நீ பசு மாதிரி என்று சொல்லி பாருங்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். 

மாடு என்றாலும், பசு என்றாலும் விஷயம் ஒன்று தான். ஆனால் சொல்லப்படும் விதம் வேறு மாதிரியாகயிருக்கிறது. 

திருவிழாக்கள் பூஜைகள் எல்லாம் கடவுளை வணங்கத்தான். 

ஆனால் அதை ஊர் கூடி சத்தம் போட்டு சொன்னால் தான் சில காதுகளால் கேட்க முடிகிறது. 

சாஸ்திரங்களாலும் சம்பிரதாயங்களாலும் கட்டுப்பாட்டுடன் இருந்த நமது இந்து மதம் இன்று கட்டுப்பாடு குலைந்து நிற்கிறது. 

ஒரு மிக பெரிய மடாதிபதி கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

இன்னொருவரோ யோக சமாதியில் காம களியாட்டம் செய்தார். 

பிரம்மச்சரியம் நிலைக்கிறதா என்று பரிசோரனை பண்ணிப் பார்த்தேன் என்கிறார். 

காவி ஆடையெல்லாம் பாவிகளின் புகலிடமோ என மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்து மத வழக்கங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் இருக்க சில ஆடம்பரமான விழாக்கள் தேவைப்படுவது கால கட்டாயமாகி விட்டது. 

இராமாயணம், மகாபாரதம் படித்திருப்பீர்கள். அதில் இராமன் இந்த அறம் செய்தான். கர்ணன் இப்படி தானம் செய்தான் என்று எல்லாம் சொல்லப்பட்டிருக்கும். 

ஆனால் அந்த ராமனோ, கர்ணனோ எங்காவது கோயில்களை கட்டினான், கும்பாபிஷேகம் செய்தான் என்று எழுதப்பட்டிருக்கிறதா. 

ஒரு சின்ன வரி கூட அப்படி கிடையாது. 

ஏன் என்றால் அப்போதைய மக்கள் எல்லோரும் ஆன்மீக விழிப்பு நிலையிலேயே இருந்தனர். 

அதனால் அவர்களுக்கு ஆலயங்கள் தேவைப்படவில்லை. 

இதிகாசங்களின் காலத்திற்கு பிறகே சின்ன சின்ன கோவில்கள் கட்டப்பட்டிருந்தன. 

புத்த மதம் எழுச்சி பெற்ற பிறகு பெரிய பெரிய மடாலயங்கள் உருவாகின.

பிரம்மாண்டமான அவைகள் ஏராளமான மக்களின் கவனத்தை கவர்ந்தது. 

இந்து மதம் அழிந்து போகாமல் இருக்க மக்களை கவர பிற்காலங்களிலேயே மாபெரும் ஆலயங்கள் அரசர்களால் எழுப்பப்பட்டன. 

எங்கும் நிறைந்த கடவுளுக்கு மாபெரும் ஆலயங்கள் ஆடம்பரம் தான். 

ஆனால் அந்த ஆடம்பரம் மக்களுக்கு தேவைப்பட்டது. அதே போன்ற நிலமை தான் இன்றும் நிலவுகிறது. எனவே ஆடம்பர விழாக்கள் தவறல்ல.

மேலும் இந்துமத விழாக்கள் ஆடம்பரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டது கிடையாது

ஆழமான சமூக நோக்கும் தத்துவச் சிந்தனையும் அதனுள் உண்டு 

ஒவ்வொறு திருவிழாவிலும் உள்ள தத்துவத்தை ஆராய்ந்தால் நமக்கு பெருத்த வியப்பை உண்டாக்கும் 

அவைகளை மற்றுமொறு பதிவில் பார்ப்போம் 

1 comment:

visaligopalan said...

vanakkam really what exactly i want you have given the explanation