Thursday, May 26, 2016

மருத்துவக் குறிப்புகள





1. கண் எரிச்சல் தீர:
நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும்.
2. ரத்தக்கொதிப்பு குணமாக:
நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு அந்தச்சாற்றை எடுத்து அருந்தி வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
3.தொண்டைக் கட்டு நீங்க:
சுக்கை எடுத்து வாயில் இட்டு, மெல்ல உமிழ்நீரில் ஊறவைத்து அந்நீரைக்குடித்து வந்தால் தொண்டைக்கட்டு நீங்கும்.
4. சுளுக்கு வலி தீர:
புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால் சுளுக்கு வலி குணமாகும்.
5.நரம்பு பலம் பெற:
சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.
6. வயிற்றுப்புண் தீர:
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டு செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
7.வயிற்றுவலி குணமாக:
அகத்திக்கீரையை நன்கு வேக வைத்துத் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.
8. இடுப்புவலி தீர :
வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்புவலி குணமாகும்.
9. உடல் பருமன் குறைய:
பொன்னாவரைக் கீரை விதையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
10. முடி நன்கு வளர:
காரட், எலுமிச்சைப் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர முடி நான்கு வளரும்.
வாழைக்குறுத்தைப் பிரித்துச் சுட்ட தீப்புண் மீது கட்டினால் தீப்புண் கொப்பளங்கள் குணமாகும்.
======================================================
1. உடல் பலவீனம் நீங்க : பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும்.
2. ரத்தம் சுத்தம் பெற : தினமும் அருகம்புல் பானம் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த விருத்தியும் உண்டாகும்.
3. வயிற்றுபுண் குணமாக :மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்னும், வயிற்றுப்புண்னும் குணமாகும்.
4. மூல நோய் தீர : புங்க மரத்துப் பட்டையை வேகவைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூலம் குணமாகும்.
5. இதய நோய் தீர : மூன்று திராட்சைப் பழத்தை வெந்நீரில் ஊறவைத்து, சாறு எடுத்து சம அளவு துளசிச் சாற்றை இதோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்,படபடப்பும் குறையும்.
6. நரை முடி கருப்பாக: முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை குறையும்.
7. உடல் வலிமை பெற: வேப்பம்பூவை கசாயம் வைத்துக் குடித்து வந்தால் உடல் வலிமை பெரும்.
8. பற்கள் கெட்டி பெற; மாவிலையில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களின் ஈறுகள் கெட்டிப்படும்.
9. ரத்த அழுத்தம் குறைய: தினமும் மீன் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் குறையும்.
10. உதிரப்போக்கு நிற்க: குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, 1 தேக்கரண்டி சீரகம் சேர்ந்து அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர ரத்தப் போக்கு நிற்கும்.
11. காசநோய் தீர: தினமும் உணவில் அன்னாசிப் பழம் சேர்ந்து சாப்பிட்டு வர காச நோய் தீரும்.
12. கண்பார்வை தெளிவடைய: இரண்டு முந்திரிப் பருப்பு, 1 தேக்கரண்டி கசகசாவை அரைத்துப் பாலில் கலக்கிக் காலை வெளியில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும், சருமமும் மினுமினுப்பாகும்.
13. வெட்டுக்காயம் குணமாக: கண்ணாடித்துண்டால் நம் உடலில் காயம் ஏற்ப்பட்டால், வாழைப்பழத்தை அந்தக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால் ரத்தப் போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
=========================================
1.வழுக்கைத் தலையில் முடி வளர :
வெங்காயத்தை செம்பருத்திப் பூவுடன் சேர்த்து அரைத்து, வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
2. வெட்டுக்காயம் ஆற:
வசம்புத் தூளைக் காயத்தின் மீது தூவினால் வெட்டுக்காயம் ஆறும்.
3. வயிற்றுப்புண் குணமாக:
தினமும் 1 குவளை திராட்சைப் பழச்சாறு அருந்தி வர வயிற்றுப்புண் குணமாகும்
4. மார்புச்சளி தீர:
ஏலக்கைப் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச்சளி தீரும்.
5. சிறுநீர் கோளாறு நீங்க:
முலாம்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.
6. காதுவழி குணமாக:
ஊமத்தம் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வழி குணமாகும்.
7. உடல் சூடு குறைய:
தினமும் ஆட்டுப்பால் அருந்திவர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.
8. முகத்தில் உள்ள கட்டிகள் குணமாக:
முகத்தில் அடிக்கடி சந்தனம் குழைத்துப் பூசிய பின் அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள கட்டிகள் குணமாகும்.
9. கண்குளிர்ச்சி பெற:
கருவேப்பிலைத் துவையல் உண்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும். தவிர வாழை இலையில் சோறு சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும்.
10. மஞ்சள் காமாலை தீர:
கீழாநெல்லி இலையை நன்கு அரைத்துப் பாலுடன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
11. உணவு செரிக்க:
வெற்றிலையில் இரும்புச்சத்தும், ஜீரணச்சத்தும் உள்ளது. ஆதலால் உண்டபின் வெற்றிலை போடுவது நல்லது.
12. ரத்தம் சுத்தம் பெற, ரத்தம் விருத்தியாக:
தினமும் அருகம்புல் பானம் அருந்தி வந்தால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த விருத்தி உண்டாகும். உள்வெளிப் புண்கள் ஆறும்.
============================================
1. பல்வலி, பல் நோய் தீர:
ஆலமரத்துப் பட்டையை மை போலப் பொடி செய்து கொள்ளவும். நீரைக் கொதிக்க வைத்த பின் இதோடு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று மாதம் சாப்பிட்டு வர பல்நோய் குணமாகும்.
2.கண் பார்வை தெளிவடைய:
பாதாம் பருப்பை வறுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
3.வேர்க்குரு நீங்க:
வடித்த கஞ்சியின் சூடு ஆறிய பின், உடலில் தடவி குளிர் நீரில் குளித்து வந்தால் வேர்க்குருத் தொல்லை தீரும். அல்லது வெங்காயத்தை இடித்துச் சாறாக்கி வைத்துக்கொண்டு, இதனுடன் பப்பாளிப் பாலை கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் வேர்க்குரு தொல்லை தீரும்.சருமமும் பளபளப்பாகும்.
4.வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் குணமாக:
நம் உடலில் உள்ள சூட்டைத் தனித்து குளிர்ச்சி தரக்கூடியது நாவற்பழம்.இப்பழத்தை வாயுத்தொல்லை உள்ளவர்களும், வயிற்றில் புண் உள்ளவர்களும் தொடர்ந்து உண்டு வந்தால் இப்பிரச்சனை தீரும்.
5.அஜீரணத் தொல்லை தீர:
சிறு குவளை நீரில் கருவேப்பிலை, சீரகம், இஞ்சி இம்மூன்றையும் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின், அதை ஆறவைத்து, இந்நீரை வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் சரியாகும்.
6.வலிப்பு நோய் தீர:
வலிப்பு நோய் உள்ளவர்கள் வெள்ளை வேங்காயத்தை நன்கு நசுக்கிய பின் ஒரு துணியில் கட்டிப் பிழிந்து சாறு எடுத்து, இந்தச் சாற்றை இரண்டு காதுகளிலும் ஊற்றினால் வலிப்பு உடனே குணமாகும்.
7.மனக் கோளாறு குணமாக:
மனப்பிரச்சனை உள்ளவர்கள் ஓராண்டுக்கு இரண்டு முறை தங்களது கைகளில் மருதாணி அரைத்துப் பூச வேண்டும். இவ்வாறு கை.கால்களில் மருதாணி இடுவதினால் உங்களுக்கு வரும் னக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
8.நெஞ்சுவலி குணமாக:
நெஞ்சுவலி உள்ளவர்கள் தினமும் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.
9. முகச்சுருக்கம் நீங்க:
முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, மிருதுவான பஞ்சை இவ்வெள்ளைக் கருவில் தோய்த்து முகம், கழுத்தில் தடவிய பின் அரைமணி நேரம் கழித்து ஈரப்பஞ்சினால் துடைத்து வந்தால் முகச்சுருக்கம் தீரும்.
10. மூட்டு வலி தீர:
அத்தி மரத்துப் பாலை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் மூட்டு வலி தீரும்.
11. சளித்தொல்லை தீர:
இஞ்சிச் சாற்றையும், துளசிச் சாற்றையும் சம அளவு எடுத்து, இவ்விரண்டையும் நன்கு கலந்து குடித்து வந்தால் சளித்தொல்லை தீரும்.

No comments: