Tuesday, December 18, 2012

சபரிமலை யாத்திரை - சில விபரங்கள்
ஐயப்பனின் வரலாறு

மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.

மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

 ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு

வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.

ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.

அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஐயப்ப விரதத்தின் ரகசியம்

ஐயப்பனை தரிசிக்கும் அனுபவத்தை போலவே, அவருடைய அவதார திருக்கதையும் மெய்சிலிர்க்கச் செய்யும். தேவர்களை மிகவும் கொடுமை படுத்தி வந்த பிரம்மாசுரனை அழிப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்தார். அவருடைய அழகில் சிவபெருமான் மயங்கினார். அதன்  விளைவாக, அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே அவர் அவதரித்தார். எனவே, கழுத்தில் மணி மாலையை அடை யாளமாக இட்டு காட்டில் விட்டு விட்டு அவர்கள் சென்றனர். இந்த நிலைமையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பந்தள நாட்டு பகுதியை ஆண்டு வந்த பந்தள மகாராஜா ராஜசேகரன், காட்டுக்கு வேட்டையாட சென்றபோது கழுத்தில் மணியுடன் கிடந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார்.

அவருக்கு அதுவரை குழந்தை கிடையாது. எனவே, கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், ராணிக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். பெற்ற மகன் என்ப தால் பாசம் அதிகமானது. அந்த பாசத்தை பயன்படுத்திய அமைச்சர் துர்போதனை செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக தலை வலிப்பது போல நாடகமாடிய ராணி,  புலிப்பால் கொண்டு வருமாறு 12 வயது பாலகன் மணிகண்டனை காட்டுக்குள் அனுப்பினார். காட்டுக்கு செல்லும்போது பம்பை ஆற்றில் மகிஷாசுரன்  தங்கையான மகிஷி தடுத்து நிறுத்த கடும் போர் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். ஒரு அழகிய பெண்ணாக சாப விமோசனம் பெற்றாள்.

விமோசனம் பெற்றதும் மணிகண்டனின் அழகிய உருவத்தை கண்டு மணம் முடிக்க ஆவல் கொண்டாள். ஆனால், மணிகண்டனோ, ‘நான் ஒரு நித்திய பிரம்மச்சாரி. ஐயப்பன் அவதாரமாக அவதரித்துள்ள என்னை நாடி எப்போது கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கின்றனரோ, அன்று நான் உ ன்னை திருமணம் செய்து கொள்கிறேன். அதுவரை மாளிகை புரத்து மஞ்சள் மாதாவாக இருஎன அருள் பாலித்தார். பின்னர், ஏராளமான புலிகளை திரட்டிக் கொண்டு நாடு திரும்பினார். அவரை அந்த கோலத்தில் கண்ட ராணியும் மந்திரியும் அதிர்ச்சி அடைந்தனர். ராஜா ராஜசேகரனும் உண்மையை உணர்ந்து மணிகண்டனை வணங்கினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று அங்கேயே தங்க மணிகண்டன் சம்ம தித்தார்.

அவர் அம்பு எய்த இடத்தில் பம்பை நதிக்கரையில் மன்னன் ராஜசேகரன் கோவில் எழுப்பினான். அதில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த விக்கி ரகத்தில் ஐயப்பனாக மணிகண்டன் ஐக்கியமானார். ஐயப்பனை வஞ்சகமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும் 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. கடைசியாக ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் விளைவே இன்று  வரை ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கும் முறை தொடருகிறது. 41 நாட்கள் என்பது ஒரு மண்டலமாக, (48 நாட்களாக) மாறி உள்ளது.

அரிக்கும் அரனுக்கும் மகனாக அரிகர புத்திரனாக பிறந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி ஐயப்பனாக உயர்ந்த சபரிமலை நாயகன், ஒவ்வொரு  ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஜோதி வடிவாய் இன்றும் காட்சியளித்து வருகிறார்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை.


சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கடும் விரதம் மேற்கொள்ள வேண்டும்.  துவக்க நாளன்று ருத்ராட்சம் அல்லது துளசி மணிகளால் ஆன  மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும்.  மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான  பேச்சுவார்த்தைகளை தவிர்த்தல் வேண்டும். தலை முடி, முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தக்கூடாது.  ஒவ்வொரு நாளும்  அருகா மையில் உள்ள கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.  கருப்பு, நீலம், காவி நிற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

முற்காலத்தில் சபரிமலைக்கு காடுகள் நிறைந்த பெருவழிப்பாதை வழியாக சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே செல்ல முடியும்.   விலங்குகள் அதிகம் வசிக்கும் இவ்வழியில் வெள்ளை நிற ஆடை அணிந்தால் வெகு வெகு தூரம் வரை தெரியும் என்பதாலும் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளிச் சிதறல் கொண்ட கருப்பு, நீலம் நிற துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா  நதியை அடைய வெகு நாட்கள் ஆகும்.  எனவே, இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்களை ஒரு புறமும், வழி உணவுக்கான பொருட்கள் மற்றொரு  புறமுமாக இருமுடி பையில் கட்டி எடுத்துச் சென்றனர். 

பள்ளிக்கட்டு அல்லது இருமுடி என்பது பருத்தித் துணியில் கைகளால் தைக்கப்பெற்ற  இரு  அறைகள் கொண்ட பை ஆகும். மாலை அணிந்த நாள் முதல் தினம்தோறும் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும், சவரம் செய்யக்கூடாது ஆகிய நெறிமுறைகளும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள பக்தர்களை தயார்படுத்த உதவும். இந்தப் பயணத்தின் முதல் பகுதி எருமேலியில் இருந்து  தொடங்கி அழுதா நதி வரை செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை அடைந்து புனிதமான கரிமலையை ஏறிக் கடக்க வேண்டும்.

அங்கிருந்து செறியனவட்டம், வலியனவட்டம் ஆகியவற்றை கடந்து முடிவில் பம்பா நதியைச் அடையலாம். தற்போது பெரும்பாலான  பக்தர்கள் வாகனங்கள் மூலம் மாற்று வழிகளில் பயணம் செய்து பம்பா நதிக்கரையை அடைகின்றனர். இதன் பிறகு  அனைவரும் சுமார் நான்கு கிலோ மீட்டார் தூரம் கடுமையான ஏற்றத்துடன் கூடிய நீலிமலையில் ஏறிக்கடந்து சபரிமலையை அடையலாம். முன்  காலத்தில் ஒற்றை வழிப்பாதையாக இருந்த இவ்வழி தற்போது மேம்படுத்தப்பட்டு இருபுறமும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அமைய பெற்றுள்ளது.


ஐயப்பன் ஸ்லோகம் (சமஸ்கிருதம்)

மகா கணபதி தியான ஸ்லோகம்

மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரமாவது:

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம

கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.
சாஸ்தா காயத்ரீ

ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்

ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்

ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ

ஓம் பூதாதி பாய வித் மஹே
மஹா தேவாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்

ஐயப்பன் மகா மந்திரம்

பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

ஐயப்பன் ஸுப்ரபாதம்

1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
பவது ப்ரஸன்ன மனன சுந்தர
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
காந்தகிரி குஸுமானி மனோஹரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர
ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
ஆனந்த பூத அனாத நர்த
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.

15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்

சாஸ்த்ர ஸுப்ரபாதம்

1. ஸ்ரீ சேச புத்ர யுரு÷ஷாத்தம தர்ம மூர்த்தே
ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்

2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்

4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
ஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

சாஸ்தா சதகம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்

1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

(சுவாமியே சரணம் ஐயப்பா)

10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே

(சுவாமியே சரணம் ஐயப்பா)

மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்

ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம

ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம

ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம

ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம

ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம

ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம

ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம

ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம

ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம

ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம

ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம

ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம

ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம

ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம

ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம

ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம

ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம

ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம

ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம

ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம

ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம
ஓம் ஜடாதராய நம

ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம

ஓம் ஹரிஹராத்மஜாய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

ஸ்ரீ தர்ம ஸாஸ்த்று மூல மந்த்ரம்

1. ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய
2. ஓம் புத்ர லாபாய
3. ஓம் மஹா சாஸ்த்ரேய
4. ஓம் சத்ரு நாச நாய
5. ஓம் மத கஜ வாகனாய
6. ஓம் பிரதயட்ச சூலாயுதாய
7. ஓம் வர வரத சர்வ ஜனமே
8. ஓம் வசமான ய ஸ்வாஹா
9. ஓம் சாஸ்த்று ஸ்ரீ பாபு ஜயாமி நமக
தற்பயாமி நமக

ஸ்ரீ சபரிகிரி வாசன் ஸ்தோத்திரம்
த்யானச் லோகம்

ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
நீல கௌம வஸம் நவீன் ஜலத
ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்

ஸ்ரீ மஹா ஸா ஸ்தாமாலா மந்த்ரம்

1. ஓம் ஹரி ஹர புத்ராய
2. ஓம் பிரும்ம நிஷ்டாய
3. ஓம் யோ ஹிந்த ராய
4. ஓம் ஸர்வக் ஞ பீடஸ் தியாய
5. ஓம் விஷ்ணு பிரும்ம முகாம ரார்ச்சிதாய
6. ஓம் அத்ரி வாஸாய
7. ஓம் ஸிம் ஹாஸனாய
8. ஓம் கர தல தருத் சாப பானாய
9. ஓம் சங்கு சக்ர சுரி காயுத தராய
10. ஓம் கட்கரா டாங்கி தாய
11. ஓம் கேரள க்ஷத்ரியா சார நிரதாய
12. ஓம் சிவ புத்ராய
13. ஓம் சிவங்க ராய
14. ஓம் சிவாய சிவை வராய
15. ஓம் பரி வாரி தாய
16. ஓம் சபரி கிரீந்தர பீட நிலையாய
17. ஓம் மஹிக்ஷி மர்த்தன விக்ர மாய
18. ஓம் கணபதி ஸமே தாய
19. ஓம் ஸர்வ பூதாதி பாய
20. ஓம் மஞ்சாம்பிகா பரிவாராய
21. ஓம் தர்ம சாஸ்ரே நமக

த்யானம்

1. அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ சரணம்
மம தஸ் மாத் காருண்ய பாவேன் ரக்ஷ்ரக்ஷ் மஹேஸ்வரா
ஆவாகனம் நஜா நாமி நஜாநாமி விஸர்ஜனம்
பூஜாம் விதிம் நஜாநாமி க்ஷம்ய தாம் பூதநாயகா

2. ஜனன மரண ரஹித பரம ஸுகதம் தேஹிமே தேஹி
த்ரை லோக்ய த்யான வாஸ ப்ரபாகர் ப்ரகாச போத
நமஸ்தோ நமஸ்தேஸ்து பகவான் ஸ்ரீ பூர்ண புஷ்களா நாத
த்ராஹிமாம் த்ராஹிமாம் பாஹி ஸர்வாப ராதம் க்ஷமஸ் வாஹிலேசம்

த்யானம்

ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம் ஸ்மராமி

ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்
பஞ்ச ரத்தினம்

1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்

2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்

3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்

ஆரத்தி மங்களம்

1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்

2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்
ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்
கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்
சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்

3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்
சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்
பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்

திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
கற்பூரம் ஹாரத்தி எடுக்க வேண்டும்

தேவர்கள் ஸ்துதி

மஹிஷி சம்காரத்தால் பெரு மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பகவானைக் கீழ்காணும் ஸ்தோத்திரத்தால் துதித்தார்கள். அதன் மூலம் மிகவும் பிரிதி அடைந்த பகவான் இத்தோத்திரம் மூலம் தன்னைத் துதிப்பவர் எவராயினும் அவர்களுக்கு வேண்டும் வரம் தருவதாக அருளி இருக்கிறார். இத் தோத்திரத்தை அனைவரும் துதிப்பது மிக விசேஷமாகும்.


தேவர்கள் வேண்டுதல்

1. ஓம் நமஸ்தே பகவதே நாமோ தாராயணாயதே
ஓம் நமஸ்தே பகவதே சர்வக் ஞாய நமோ நம

2. கோர சம்சாரார்ண வஸ்ய தாரகாய நமோ நம
தாரகப் பிரம்ம ரூபாய பூத நாதாயதே நமோ நம

3. போத ரூபாய பூதாய புண்ய பூர்ணயதே நமோ நம
வர்ணத் ராய யுதேகா ஓங்காராய நமோ நம

4. பகவராய நமஸ்துப்யம் ரேபாந் தாய நமோ நம
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ நம

5. பகவராய தகாராய ரேபாந்தாய நமோ நம
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம

6. ஹாபோ சங்கடம் தேக சகலம் சகலேச்வர
தேவேச விச்வ கர்த்தா ஸ்த்வம் பரிபாஹி ஜெகத்பதே

7. விச்வ பர்தா ஜய சதா விஸ்வ ஹர்த்தா ஜெயப்ரபோ
சர்வே ஷாம் ஜீவ ஜாலனா மேக ஜீவஸ்வரூபக

8. தேவ தேவ ஜயத் வம்போ சர்வதா சர்வநாயகா
தர்ம ஸாஸ்தா ஜய பகவான் ஜன்மதுக்க வினாசன

சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

2. சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

4. துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

5. த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

6. பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

7. களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

வழிபாட்டு இடங்கள்

அரசனாக அச்சன் கோவிலில்

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.

அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.

படிப்பு தரும் குட்டி சாஸ்தா

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீர்கிறது. கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும் ஆறும் ஓடுகிறது. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

மாப்பிள்ளை ஐயப்பன்

சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிவே இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

சொரிமுத்தையனார் கோயில்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்தய்யனார் கோயிலில், தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

மாம்பழத்துறை பத்ரகாளி

ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள்.

பந்தளம்

சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது

மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.

ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகை புறத்- தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி கண்கொள்ளா அதிசய காட்சி.
  
ஐயப்பனின் அறுபடை வீடுகள்


தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அவை:

1 ஆரியங்காவு
2 அச்சன்கோவில்
3 குளத்துப்புழா
4 எரிமேலி
5 பந்தளம்
6 சபரிமலை

1. ஆரியங்காவு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில்  ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக அய்யப்பன் காட்சி தருகிறார்.

2. அச்சன்கோவில்

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்று விக்கப்பட்ட இந்த கோயிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும் கருப்ப னின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் அய்யப்பனை தரிசிக்கலாம்.  இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது  போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை  கல்யாண சாஸ்தாஎன்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு  அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

3. குளத்துப்புழா
செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ள தால்  பால சாஸ்தாஎன்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அள வுக்கே கட்டப்பட்டு உள்ளது.

4. எரிமேலி

கேரளாவில் உள்ள இத்தலத்தில் அய்யப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவி லேயே உள்ளது.

5. பந்தளம்

இந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய  கோயில் இங்கு உள்ளது. இங்கு  சுவாமி ஐயப்பனுக்குரிய உரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கரு தப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து  கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இதன் அருகில் செங்கனூர் ரயில் நிலையம் உள்ளது.

6. சபரிமலை

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி கேட்பவர்களுக்கு கேட்ட  வரம்  வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் அறுபடை வீடுகளான  இந்த 6 கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும்  சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

ருத்ராட்சம், துளசி மாலை அணிய வேண்டும்

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன்.  இதில்  ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது.  இது  தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள்.  ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.

கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.
சபரி மலை செல்ல விரும்பும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் அல்லது 19ம் தேதிக்குள்  ருத்ராட்சம், துளசி மணிகளால் செய்யப்பட்ட மாலையை அணியவேண்டும். மது, மாமிசம், தவிர்க்க வேண்டும். கருப்பு, நீலம், குங்குமப்பூ உடைகள் அணிந்து விரதங்கள் கடை பிடிக்கவேண்டும். காட்டுப் பகுதிக்குள் செல்லவேண்டும் என்பதால் இதுபோன்ற உடைகள் அணிவது வழக்கமாகிவிட்டது. கருப்பு, நீல நிறங்கள் மனிதனை விலங்கு களிலிருந்து காப்பாற்றும்.

சாதாரண படுக்கையில் தலையணை தவிர்த்து உறங்க வேண்டும். காலணி, குடைகளை உபயோகிக்க கூடாது. பொதுவாக  41 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மலைக்கு புறப்படும் முன்பு பெற்றோரை வணங்க வேண்டும்.

நடை திறக்கும் காலம்


ஆண்டுதோறும் சாதி, மத, இன வேறுபாடின்றி சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து  சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்கின்றனர்.  10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.  இதற்கு ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆண்டு தோறும் மண்டல பூஜை கார்த்திகை 1ம் தேதி முதல் 41 நாட்களும், மகர சங்கராந்தியின்போதும்,  மகர விளக்கு அன்றும் ஏப்ரல் 14ல் வரும்  விஷுவின்போதும் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

பக்தர்களுக்கான வசதிகள்

திருவாங்கூர் தேவசம் போர்டு  சபரிமலை ஐயப்பன் கோயிலை சுமார் ஸி30 கோடிக்கு (7 மில்லியன் டாலர்) காப்பீடு செய்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக விபத்து காப்பீடு அளிக்கும் திட்டத்தையும்  செயல்படுத்தி வருகிறது. நிலைக்கல்லில் இருந்து மலையேற்றப் பாதையில் சன்னிதானம் வரையுள்ள

18 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் போது பக்தர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைந்தாலோ அல்லது உயிரிழக்க நேரிட்டாலோ சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை  இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்க இயலும்.

சபரிமலையில் பக்தர்கள் செய்யக்கூடாதது


இருமுடிக்கட்டு இல்லாமல் 18ம் படி ஏறக்கூடாது.

புனிதமான பம்பை நதியை அசுத்தப்படுத்தக் கூடாது.

பக்தர்கள் காலை கடன்களுக்காக கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக திறந்தவெளியை பயன்படுத்தக் கூடாது.

உடுத்திய ஆடைகளை பம்பை நதியில் களையக் கூடாது

புகைபிடிக்கக் கூடாது

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள்    
கொண்டுவருவதையும் தவிர்க்க வேண்டும்.

சரங்குத்தியில் தான் சரங்குச்சிகளை சமர்ப்பிக்கவேண்டும். வேறு எந்தப் பகுதியிலும் அவற்றை போடக்கூடாது.

சாப்பிட்ட பின் இலைகள் மற்றும் கழிவுகளை பம்பை நதியில் போடக்கூடாது.

18ம் படி மீது தேங்காய்களை வீசி உடைக்கக் கூடாது.

தேங்காய்களை உடைக்க 18ம் படியின் அருகிலேயே தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுப்பு வைத்து சமையல் செய்யும் பக்தர்கள் சமையல் முடிந்த பின்னர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு செல்லவேண்டும். 

கற்பூர ஆராதனை செய்பவர்கள் தீயை அலட்சியமாக விட்டுவிட்டு செல்லக்கூடாது.

10 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள பெண்கள் சபரிமலை செல்லக்கூடாது.

சனி கிரகத்தின் தேவன் ஐயப்பன்

ஐயப்பன் சனி கிரகத்தின் தேவனாக கருதப்படுகிறார். சனி தோஷம் மாறுவதற்கு சாஸ்தாவின் அருளே போதுமானது. ஏழரை சனி, கண்டக சனி மற்றும்  அஷ்டம சனி ஆகியவை எல்லாம் ஐயப்ப தரிசனத்தால் மாறிவிடும். ஐயப்பனுக்கு பூஜை செய்து வழிபட்டால் சனியால் ஏற்படும் அனைத்து தீங்குகளும் மறைந்துவிடும். சனி தோஷத்தை அகற்ற ஐயப்பனுக்கு நீராஞ்சன பூஜை செய்து வழிபடுவது தான் மிகச்சிறந்தது. நெய்யபிஷேகம் செய்தாலும் சனியால் ஏற்படும் தீங்குகளை அகற்றலாம்.

எல்லா வழிகளும் சபரி மலை நோக்கி...

சபரிமலைக்கு வாகனங்களில் செல்பவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு சில பாதைகளே உள்ளன. ஆனால், பாத யாத்திரையாக செல்பவர்களுக்கு பல்வேறு  வழிகள் உள்ளன. வாகனங்களில் வருகின்றவர்கள் சாலக்கயம், பம்பை வழியாக சபரிமலை வருகின்றனர். பாத யாத்திரையாக வருபவர்கள் அனைவரும் எரிமேலி  வழியாகவும், புல்மேடு வழியாகவும் வருகின்றனர். வாகனத்தில் வருகின்ற பக்தர்கள் அனைவரும் இந்த இரண்டு பாதைகள் வழியாகவே வந்து சேரு கின்றனர். முன்பு கரிமலை வழியாகவும், வண்டிப்பெரியார் சத்திரம் வழியாகவும் பக்தர்கள் வந்தனர். அன்று பம்பை வரை வருவதற்கு சாலை வசதி  இல்லை, சாலை அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

கேரளாவில் இரண்டாவது நீர் மின் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட இந்த சாலையை  தற்போது சபரிமலை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். முன்பு தனியார் பஸ்களே சபரிமலைக்கு இயக்கப்பட்டன. சாலக்கயத்தில்தான் முதலில் பஸ்  ஸ்டாண்ட் இருந்தது. சாலக்கயத்தில் இருந்து காட்டுப் பகுதிகள் வழியாக நடந்து பம்பைக்கு வரவேண்டும். மரக்கூட்டத்தில் இருந்து இரண்டு வழிகள் சன்னிதானத்தில் உள்ளன. சரம்குத்தி வழியும். சந்திரானந்தத்தன் ரோடு வழியாகவும் வரலாம். சரம் குத்தி  வழி பாரம்பரியமாக உள்ள பாதை. 18ம் படி ஏறுவதற்கான பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது சரம் குத்தி, மரக்கூட்டம் தாண்டி பெரும்பாலும்  சபரிபீடம் வரை நீண்டு நிற்பது உண்டு.

மலை ஏறும்போது இயற்கை அழகை ரசித்தபடி செல்ல வண்டிப்பெரியார், உப்புபாறை வழி செல்லவேண்டும். குமுளியில் இருந்து வண்டிப்பெரியார்  வழி உப்புப்பாறை (புல்மேடு) வரை கேரள அரசு பஸ் போக்குவரத்து உண்டு. ஜீப்பில் இங்கு பயணிகளை ஏற்றி வருவதுண்டு. புல்மேட்டில் இருந்து சன்னிதானத்திற்கு 7 கிமீ தூரம் உள்ளது. பெரும்பாலும் காட்டு யானைகள், காட்டெருமை போன்றவை இந்தப் பகுதியில் மேய்ந்துகொண்டிருக்கும். தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் இந்த வழியாக அதிகம் செல்கின்றனர். முன்பு வண்டி பெரியார் சத்திரம் வழியாக ஐயப்ப பக்தர்கள் சன்னிதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். உருளை கற்கள் நிறைந்த வழி என்பதால்  நடப்பதில் சிரமம் உண்டு. மகரவிளக்கு காலங்களில் இந்தப் பாதை வழியாக பக்தர்கள் சபரிமலை வருகின்றனர்.
குளிப்பதற்கு இறங்கும்போது......


சரண பாதையில் குளிப்பதற்காக பல இடங்களிலும் பம்பை நதியை பயன்படுத்துவது உண்டு. இங்கும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. எரிமேலி ரூட் டில் செல்லும் பக்தர்கள் கணமலையில் வாகனம் நிறுத்தி பம்பை நதியில் குளிக்க இறங்குகின்றனர். அந்த பகுதியில் ஆழம் அதிகம் உண்டு. எனவே  கவனமாக இறங்க வேண்டும். வடசேரிக்கரை ரூட்டில் போகின்ற ஐயப்ப பக்தர்கள் பெருநாடு முதல் நதிக்கரை யோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு குளிக்க இறங்குகின்றனர். 

இரண்டு நதிகள் இங்கே உள்ளன. பம்பா நதியும் கக்காட்டாறும் இங்கு பாய்கிறது. மூழியார், கக்காடு, மணியார் ஆகிய இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் வெளியேற்றப்படுகின்ற தண்ணீர் கக்காட்டாறு வழியாக பாய்கிறது. மின் உற்பத்தி தொடங்கினால் உடனே ஆற்றில் தண்ணீர் மட்டம் திடீரென்று உயரும். எனவே குளிப்பதற்கு இறங்குகின்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பெருநாடு பூவத்தும்மூடு முதல் வடசேரிக்கரை வரை பம்பா நதியில் குளிக்கடவு என்று அழைக்கப்படுகின்ற குளிப்பதற்கு இறங்குகின்ற பகுதிகளில்  அருகே வாகனங்கள் நிறுத்தி குளிப்பதற்கு இறங்குவது வழக்கமாகும். தங்களது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளின்  அருகே இங்கே குளிக்கலாம் என்று அறிவிப்பு பலகைகளை வைத்திருப்பர். இதனை கண்டு ஏமாறாமல் இதனை கவனத்தில் கொள்வதுடன் ஆற்றில்  ஆழமான பகுதிகளும், வெள்ளப்பெருக்கு வருவதையும் கருதி பக்தர்கள் கவனமாக குளிக்க வேண்டும்.

சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலம் சபரிமலை


கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலம் சபரிமலை. மஹிஷி என்ற  அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் இங்கு தியானம் செய்ததாக ஐதீகம். கடல்நீர் மட்டத்திலிருந்து 914 அடி உயரத்தில் பதினெட்டு மலைகளுக்கு இடையே  மலையின் உச்சியில் காடுகள் சூழ அமைந்துள்ளது.
 
 சபரி மலை இலவச காப்பீடு திட்டம்


கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரி மலை இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 914 மீட்டர் உயரம் உள்ளது. சபரிமலை தேவஸ்வம் போர்ட் சபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோயிலை ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் இலவச காப்பீடு திட்டமும் அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்பனின் தாலாட்டு - ஹரிவராசனம்

ஒவ்வொரு நாள் இரவும் ஐய்யப்பன் கோயில் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்படுகிறது. இது இறைவனை  உறங்கச்செய்யும் தாலாட்டுப்பாடல்.  ஸ்ரீகம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர், கோயிலில், சுவாமி பாடலைப் பாடிவந்தார். சுவாமி விமோசனானந் தாவின் முயற்சியால் கோயிலின் தந்திரி மற்றும் மேல் சாந்தி இந்தப்பாடலை ஒரு தாலாட்டு பாட்டாக ஏற்றுக்கொண்டார். இந்த பாடல் 352 எழுத்துக்கள் 106 சொற்கள் மற்றும் 32 வரிகள் உடையது.

இருமுடி


பருத்தித்துணியில் இரண்டு அறைகளாகப் பிரித்து அதில் புனிதமான நெய்யை கொண்டும் ஐய்யப்பன் விக்கிரகத்தின் மீது நெய் அபிஷேகம்  செய்யப்படும்.

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

சபரிமலைக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள்


1. நிலைக்கல் கோயில், பத்தனம்திட்டா

2. மலையாளப்புழா கோயில், பத்தனம்திட்டா

3. ஆரன்முலா பார்த்தசாரதி கோயில்

4. மகாதேவர் கோயில், செங்கன்னூர்

5. ஸ்ரீவல்லபா கோயில், திருவல்லா

6. கவியூர்ஆஞ்சநேயா கோயில், திருவல்லா

7. செட்டிக்குளங்கரை தேவி கோயில், மாவேலிக்கரா

8. மன்னார்சாலை கோயில், ஹரிப்பாடு

9. சுப்பிரமணியர் கோயில், ஹரிப்பாடு

10. சக்குளத்துக்காவு கோயில், திருவல்லா

11. கண்டியூர் மகாசிவன் கோயில், மாவேலிக்கரா

12. சுனக்கற மகாதேவர் கோயில், மாவேலிக்கரா

13. பதநிலம் பரப்பிரம்மா கோயில், நூரநாடு.

நெய் அபிஷேகம்

பக்தர்கள் ஆசாரத்துடன் விரதம் இருந்து தலையில் சுமந்து வரும் இருமுடியில் காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு ஐயப்பனின் மூல விக்கி ரகத்தின் மீது நெய்யபிஷேகம் செய்யப்படும். ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் தத்துவமாக இது கருதப்படுகிறது.  முதல் முறையாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் (கன்னி அய்யப்பன்மார்கள் எனப்படுவோர்) குங்குமப்பூ நிறம் கொண்ட இருமு டியை சுமந்துவர வேண்டும். இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.

அகம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி


சபரிமலை வந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இணையற்ற அறிவு கிடைக்கும் என்பது ஐதீகம். சமஸ்கிருத மொழியில் தத்வம் அசிஎன்ப தற்கு  நீயும் ஒரு கடவுள்’’ என்பதற்கான ஞானமே. இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சுவாமி என்று அழைக்கி றார்கள். மேலும் அனைவரும் அந்த பரமாத்மா அல்லது உலகளாவிய ஆத்மா என்ற நிலையை அடைய வேண்டும் என்ற வேட்கையை  இச்சொல்  குறிக்கிற

மணிக்கணக்கில் வரிசையில் நிற்கவேண்டாம், ஆன்லைன் முன்பதிவு வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்


சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கிவிட்டால் இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள்
குவிகின்றனர். இவ்வாறு வெகுதொலைவில் இருந்து வரும் பக்தர்களால் சில சமயங்களில் ஐயப்பனை ஒரு நொடி கூட சரியாக தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படுவது உண்டு. அதுவும் மணிக்கணக்கில் வரிசையில் நின்றாலும் ஐயப்பனை சரியாக தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பலர் திரும்பிச் செல்கின்றனர். இதை தவிர்ப்பதற்காக சபரிமலையில் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மண்டல சீசனில் தான் இந்த ஆன்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வருடத்திலேயே இந்த திட்டத்திற்கு பக்தர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதன் மூலம் மிக எளிதில் தரிசனம் செய்து சென்றனர். தமிழக பக்தர்கள் தான் இந்த வசதியை அதிகமாக பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இந்த ஆன்லைன் வசதி மிக நவீனப்படுத்தப்பட்டுள்ளது. www.sabarimalaq.com  என்ற இணையதளத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அந்த இணையதளத்தில் கேட்கப்படும் விவரங்களை அளித்தால் போதும். இறுதியில் கூப்பனை பிரிண்ட் எடுத்து குறிப்பிட்ட சமயத்திற்கு சபரிமலை சென்றால் போதும். பம்பையில் கூப்பன்களை பரிசோதிக்க கேரள காவல்துறையின் சார்பில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுண்டரில் கூப்பனை காண்பித்துவிட்டு சன்னிதானத்திற்கு செல்லலாம். சன்னிதானத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கான தனி வரிசையில் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம். அதிகபட்சமாக 20 நிமிடத்தில் ஐயப்பனை தரிசித்துவிட்டு திரும்பலாம்.

கோயில் பிரசாதம்


சபரிமலை கோயிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இது அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களால் ஆனது.  சபரிமலையில் இந்த பிரசாதத்தை செய்வதற்காக அரிசி, செட்டிக்குளக்கரை தேவி கோயிலில் இருந்து பெறப்படுகிறது.

கே.ஜே.யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்

30 வருடங்களுக்கும் மேலாக பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடலே சபரிமலை கோயிலில் ஒலிபரப்பப்படுகின்றது. அச்சமயம் பக்தர்கள் மட்டுமல்லாது அரசுப் பணியில் ஈடுபட்டுள்ளோர், வணிகம் செய்வோர் கூட எழுந்து நிற்பர்.


சபரிமலைக்கு அருகிலுள்ள ரயில் நிலையங்கள்


சபரிமலைக்கு அருகே கோட்டயம், பம்பை மற்றும் திருவல்லா ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை உட்பட தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களிலிருந்து வருபவர்கள் கோட்டயம் அல்லது செங்கணூர் ரயில் நிலையங்களில் இறங்கி பம்பைக்கு கார்  அல்லது பஸ்களில் செல்லலாம். இந்த ரயில் நிலையங்களில் இருந்து பம்பைக்கு சீசன் சமயங்களில் 24 மணிநேரமும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.  கேரள அரசு போக்குவரத்துக் கழகம் இந்த ரயில் நிலையங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

பெண் பக்தர்களின் கவனத்திற்கு!

நாட்டில் ஐயப்பனுக்கென பல கோயில்கள் இருந்தாலும், கேரளமாநிலம், பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை  ஐயப்பன் கோயில் மட்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் இந்த ஐயப்பனை தரிசிக்க கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் வெளிநாட்டு பக்தர்களும் உண்டு. இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சரிய கோலத்தில் குத்துக்காலிட்டு, யோகநிலையில், சின்முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே 11வயது முதல் 49 வயது வரை உள்ள பெண் பக்தர்களை  பம்பைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதே கிடையாது. அப்படி இவர்கள் வந்தாலும், பம்பையில் உள்ள கணபதி கோயிலிலேயே நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். அதே சமயம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களாக இருந்தாலும் கூட, பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கு  பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் வந்து விட்டால், அவர்களுடைய வயதை சரிபார்க்க பேன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளார் அட்டை போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்கும் படி கூறுகிறார்கள். இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை   இருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டு, இது போன்ற அடையாள அட்டை இல்லாத நிலையில் அவர்கள் பம்பையிலேயே நிறுத்தப்படுகின்றனர். எனவே இந்த பெண்பக்தர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியாது.  அதுமட்டுமின்றி, இவர்களுடன் வரும் ஆண் பக்தர்களும் இவர்களை தனியாக விட்டு விட்டு ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க, பெண்பக்தர்கள் தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் அதற்கான போட்டோ காப்பியை எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற விஷயங்களை சபரிமலைக்கு அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்களும், குருசாமிமார்களும் பெண் பக்தர்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம்.

சபரிமலை செல்லும் இதய நோயாளிகளின் கவனத்திற்கு:

பம்பையிலிருந்து சன்னிதானம் செல்லும் வழி கடினமான மலைப்பகுதியாகும். சாதாரணமாக நல்ல திடகாத்திரமான ஆட்களுக்கு கூட இந்த பாதை யில் மூச்சு வாங்கும். ஒரே மூச்சில் சன்னிதானம் வரை நிற்காமல் செல்வது கடினமாகும். அப்படிப்பட்ட இந்த பாதையில் இதய நோயாளிகள் மிகுந்த  கவனத்துடன் மலை ஏறவேண்டும். அவர்களுக்கு தேவையான சில மருத்துவ அறிவுரைகள்:

1. சபரிமலை செல்வதற்கு முன் மருத்துவரின் அனுமதி கட் டாயம் தேவை.

2. மருந்துகள் இருந்தால் சரியான நேரத்திற்கு அவற்றை சாப்பிட வேண்டும்.

3. கனமான பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.

 4.  உணவு சாப்பிட்டு 2 மணிநேரத்திற்கு பிறகே மலை ஏறவேண்டும்.

5. மலை ஏறும்போது வழியில் எதுவும் சாப்பிடக் கூடாது. குளிர்பானம் எதுவும் கு டிக்கக் கூடாது. தாகம் எடுத்தால் லேசாக தொண்டையை நனைத்துக் கொள்ளலாம்.

6. சன்னிதானத்தை அடைந்த பின்னர் குறைந்தது 15 நிமிடங்களா வது ஓய்வெடுத்த பின்னரே சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ செய்யவேண்டும்.

நடந்து செல்ல முடியாதவர்களுக்கு டோலி வசதி:

பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு நடந்து செல்ல முடியாதவர்களுக்கு டோலி வசதி உண்டு. 4 தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு சாய்வான இருக்கை யில் பக்தரை அமர வைத்து சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கு தேவ சம் போர்டு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்துள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் உள்ள தேவசம் போர்டின் தகவல் மையத்தை பக்தர்கள்  தொடர்பு கொண்டால் உண்மையான டோலி கட்டணத்தை தெரிந்து கொள்ளலாம்.


சபரிமலையில் ஓட்டல்களில் உணவு தரமாக இல்லையா, ஒரு போன் செய்தால் போதும்

சபரிமலையில் சீசன் தொடங்கிய உடனேயே சபரிமலை செல்லும் வழி நெடுக ஆங்காங்கே ஓட்டல்களும் முளைக்கத் தொடங்கிவிடும். பெரும்பாலான  ஓட்டல்களில் சுகாதாரமில்லாமல் தான் உணவுகளை தயாரிக்கின்றனர். ஆனால் பசி கண்ணை மறைத்துவிடுவதால் யாரும் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். சாப்பிட்ட பின்னர் வயிற்றில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதற்குப் பின்னர் டாக்டரிடம் ஓடவேண்டிய நிலை உள்ளது. கேரளாவில் சமீப காலமாக ஓட்டல் உணவு சாப்பிட்டதால் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 இதையடுத்து ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் சபரிமலை பகுதியிலுள்ள ஓட்டல்களிலும் திடீர் சோதனை நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சபரிமலையில் 2 உணவு பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 48 அதிகாரிகள் உட்பட 68 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏதாவது ஓட்டலில் வழங்கப்படும் உணவில் குறை இருந்தால் 1800 425 1125 என்ற இலவச டெலிபோனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.  காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை இந்த டெலிபோன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்ற சமயங்களில் 89433 46198, 89433 46199 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

கோவையில் ஐயப்பனுக்கு பொற்கோயில்


கோவை புதுசித்தாபுதூரில் ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 1955ம் ஆண்டில் அந்த பகுதியை சேர்ந்த மில் தொழிலாளர்கள் மூலமாக து வங்கிய இந்த கோயில் 75 சென்ட் நிலப்பரப்பில் பிரமாண்டமான ஐயப்பன் பொற்கோயிலாக மாறிவிட்டது. கடந்த 1969ம் ஆண்டில் பாலக்காடில்லத்து  பெரிய நீலகண்டன் நம்பூதிரி தலைமையில் இந்த கோயிலில் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது நீலகண்டன் நம்பூதிரி கு டும்பத்தின் பராமரிப்பில் இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறையின் திட்ட கோயில்களில் கோவை ஐயப்பன் கோயிலும் இடம் பெற்றுள்ளது.  இந்த கோயிலின் மேல்சாந்தியாக வாசுதேவன் உள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை புதிய மேல் சாந்தி நியமிக்கப்படுவார்.

கேரள மகாகோயில்களில் (ஷேத்திரம்) பின்பற்றப்படும் ஆச்சார பூஜை விதிகள் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலும் பின்பற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த கோயில், பொற்கோயிலாக பொலிவு பெற்றது. 32 அடி உயரம் (18 பறை) உள்ள தங்க கொடிமரம், தங்க கோபுர கலசம், தங்க திருப்படி (சோபாணம்) அமைக்கப்பட்டுள்ளது. 6 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்கத்தில் தங்க கதவுகளும், 25 கிலோ தங்கத்தில் கோயில் மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கோயிலில் 35 கிலோ எடையில் தங்க தகடுகளால் கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம் முழுவதும் கேரள மாநிலத்தின் காணிப்பையூர் தச்சு முறையில் வடிவமைக்கப்- பட்டுள்ளது.

கோயில் பிரகாரத்தில் சுற்று விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் ஐயப்பன் ஸ்ரீசக்கரத்தில் சின்முத்திரையுடன் மூலவராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். எந்த ஐயப்பன் கோயி லிலும் இதுபோன்ற காட்சி கிடையாது. பெரும்பாலான கோயில்களில் நின்ற கோலம், அமர்ந்த கோலம், புலி வாகன கோலத்தில் ஐயப்பன் காட்சிய ளிக்கிறார். மேலும் இந்த கோயிலில் சிவ பெருமான், அம்பாள், முருகன், நாகராஜன், குருவாயூரப்பன் மற்றும் நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன் னதி உண்டு. கோயிலில் தினமும் 6 கால பூஜை நடக்கிறது. தினமும் அன்னதானமும், பஜனையும், தாந்திரீக விதிப்படி பூஜையும் நடக்கிறது.  லட் சார்ச்சனை, நவராத்திரி பூஜை, ஆடி மாதம் 30 நாள் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது.

கோயிலில் பிரார்த்தனை மண்டபம், நடைபந்தல், சிற்றம்ப லம், நமஸ்கார மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தில் ஐயப்பன் கோயில் வளாகத்தில் 5 ஆயிரம் குழந்தை களுக்கு தங்க ஊசியில் தேன் தடவி அகர முதல எழுத்து எழுதுவது வாடிக்கையாக நடக்கிறது. குருவாயூர் கோயில் போல் அமுதூட்டல், துலாபாரம்  கொடுக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. கார்த்திகை முதல் நாளில் இந்த கோயிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சபரி மலைக்கு மாலை போடுவது நடக்கிறது. இந்த கோயில் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சபரி மலைக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று வருவது குறிப்பிடதக்கது.
இணையதளத்தில் முன்பதிவு


நீண்ட தொலைவில் இருந்து  சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக  2011ம் ஆண்டு முதல் இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. கேரள காவல் துறை இதற்கான  ஏற்பாட்டினை செய்துள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் www.sabarimala.keralapolice.gov.in மற்றும் www.sabarimalaq.com
ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும்போது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் எண்ணை குறிப்பிட்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.

இதையடுத்து அவர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கப்படும். பக்தர்கள் அந்த அனுமதி சீட்டை பிரின்ட்  எடுத்து வைத்து கொள்ள வேண்டும். தரிசன நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பாக சன்னிதானத்துக்கு வந்து விட வேண்டும். இவ்வாறு முன்பதிவு செய்யும் பக்தர்கள் எந்த இடத்திலும் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சபரிமலை வரும்போது அவர்கள் கண்டிப்பாக பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
சரண பாதையில் ஆபத்துகள் கண மலையும், கம்பகத்து வளைவும்.....


கண மலையும், கம்பகத்து வளைவும் கடக்கும்போளும் ஆபத்து ஒந்நும் உண்டாகருதே....என்பது சபரிமலை செல்கின்ற ஐயப்ப பக்தர்களின் பிரார்த்தனையாக இருக்கும். சரண கோஷங்களுடன் செல்கின்ற பக்தர்களின் வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்ற பிரதேசங்களாக இவை உள்ளன. எரிமேலியில் இருந்து முக்கூட்டத்தற, பம்பாவாலி வழி பம்பைக்கு உள்ள பாதையில் கண மலை உள்ளது. ஏற்றம், இறக்கம், அபாய வளைவுகள் கணமலையில் காத்திருக்கும் ஆபத்தின் வழிகளாகும். அறிமுகம் இல்லாத டிரைவர்கள் வேகத்தில் வாகனம் இயக்கினால் எதிரே வருகின்ற வாகனத்திற்கு வழிவிடும்போது உடனே வாகனத்தை திருப்புவதால் விபத்து நிகழ்கிறது. கணமலை இறக்கத்தை வாகனங்கள் இறங்கும்போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.

பம்பை நதியில் கணமலையை கடக்கின்ற பாதையான சாலைக்கு அகலம் குறைவு. இதனால் இங்கு வேகம் குறைவாக செல்ல வேண்டும். இதற்காக முன்னறிவிப்பு போர்டுகள் இந்த சாலையில் வைக்கப்பட்டுள்ளன. வடசேரிக்கரை - பம்பை ரூட்டில் உள்ளது கம்பகத்து வளைவு. இளாகைக்கும் பாப்பள்ளிக்கும் நடுப்பகுதியில் உள்ள அபாய வளைவு இது. வனப்பகுதி என்பதால் இரவுநேரங்களில் பனிபடர்ந்த பகுதியாக மாறிவிடும். இதனால் சாலையின் இருமருங்கிலும் உள்ள பள்ளங்களை அறிந்துகொள்வதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் உண்டு.

நிலைக்கல்லுக்கும், பம்பைக்கும் நடுப்பகுதியில் விபத்துகளை ஏற்படுத்துகின்ற பள்ளங்கள் நிறைய உள்ளன. அட்டத்தோடு என்ற இடத்திலும் கம்பகத்து வளைவிலும் பனி படருவதுதான் விபத்துக்கு முக்கிய காரணம். இரவு நேரங்களிலும், மழை நேரத்திலும் பனி படருவதின் காரணமாக சாலையை சரியாக கணிக்க முடியாத சூழல் ஏற்படுவதுண்டு. பனி படர்ந்திருந்தால் வேகத்தை குறைத்து வாகனங்களை இயக்குவது விபத்தில்லா பயணத்திற்கு வழிவகுக்கும்.

அவசர உதவிக்கு

சபரிமலையில் பக்தர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக போன் மூலம் போலீசை தொடர்பு கொள்ளலாம். சன்னிதானத்தில் அவசர போலீஸ் உதவிக்கு 04735 202016 என்ற எண்ணிலும், பம்பையில் அவசர உதவிக்கு 04735 203386 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் பக்தர்கள் இந்த எண்ணில் தொடர்பு உதவி கோரலாம்.

மருத்துவமனை வசதிகள்

சபரிமலை வரும் பக்தர்களுக்கு வசதியாக பம்பையிலும், சன்னிதானம் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான ஆங்கில, ஹோமியோ மற்றும் கேரள ஆயுர்வேத மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பக்தர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக பரிசோதித்துக் கொள்ளலாம். இலவசமாக மருந்துகளும் இங்கு வழங்கப்படும். இது தவிர கடினமான மலைப்பகுதிகளில் ஏறும்போது பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இவர்களுக்காக  அப்பாச்சிமேடு, நீலிமலை உட்பட பகுதிகளில் ஆக்சிஜன் பார்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூச்சுத் திணறல் ஏற்படும் பக்தர்கள் இங்கு சென்று சுத்தமான ஆக்சிஜன் வாயுவை சுவாசிக்கலாம்.

Video Links:

Audio Links:

Ayyappan songs downloading link:
 .

3 comments:

kodikarthi said...

ஐய்யப்பன் கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டது?

Treasure said...

Until the 10th century AD, the main religion of Kerala were Buddhism and Jainism.[5] Following the attack that took place between 10th and 12th century AD, Hinduism established itself in Kerala. The legend of Hariharaputra (son of Vishnu and Siva) is probably the result of the compromise between Vaishnava and Saivas streams of Hinduism.

After the installation of the temple, it was mostly unreachable for about three centuries.Later 12th century, A prince of Pandalam Dynasty called Manikandan, rediscovered the original path to reach Sabarimala. He had many followers with him, including the descendants of the Vavar family. This Prince is referred as a Avatar of Ayyappa, and being believed that he led a pack of Leopards to his Palace with a Muslim Sufi called Vavar, and later disappeared to the Sabarimala temple.They refreshed their resources at Erumely and this marked the beginning of the famous Petta Thullal at Erumely. They laid down their arms at the place today known as Saramkuthy. Those who are on their maiden visits to Sabarimala thrust arrows at this place. The temple was then renovated. In 1821 AD, the kingdom of Pandalam was added to Travancore. 48 major temples including the Sabarimala temple were also added to Travancore. The idol was erected in 1910[citation needed]. In 1950, a fire broke out which destroyed the entire temple and had to be reconstructed.

Anonymous said...

good information
still more is there please share the same
very much interested in knowing the facts of sabarimalai
definitely there is a supreme power exist at sabari malai

Thanks and Regards

G.Krishnan
Chennai