நான் படித்தது. நீங்களும் படிக்கலாம்
வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார், அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம், எங்கள் பேச்சு பல உலக விவகாரங்களை சுற்றி வளைத்து கடைசியில் அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதில் நின்றது.
அயல்கிரகவாசிகள் பூமிக்கு வருவது இருக்கட்டும், நமது பூமிவாசிகள் அயல்கிரகங்களுக்கு சென்று இருக்கின்றார்களா? அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப்போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா? அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றும் சரித்திரக் குறிப்புகளில் உண்டா? என்று கேட்டார்.
ராமாயணத்தில் இலங்கையின் அரசன் குபேரனோடு போர் புரிந்து அவனது புஷ்பக விமானத்தை கைப்பற்றிய விதமும் அந்த புஷ்பக விமானத்தில் ஏறி இலங்கை வேந்தன் பல உலகங்களை வெற்றி கொண்டதையும் அதே போன்று மஹாபாரதத்தில் பாசுபதாஸ்திரத்தை பரமேஸ்வரனிடமிருந்து பெற்ற காண்டீபன் ஒரு விசித்திரமான பறக்கும் வாகனத்தில் ஏறி தேவலோகம் மற்றும் பல உலகங்களுக்கு சென்று வந்ததைப் பற்றியும்குறிப்புகள் இருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினேன்
எனது பதிலால் அவர் ஓரளவு திருப்தி அடைந்தாலும் அந்த பதில் எனக்கு அவ்வளவாக திருப்திகரமாக தோன்றவில்லை, எனவே பூமிவாசிகளின் அயல்கிரக பயணத்தைப் பற்றி ஆராய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் எழுந்தது.
பலவிதமான உலகங்களுக்கு இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று வந்ததற்கான ஆயிரமாயிரம் குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன, இதில் பெரும்பாலனவற்றை கதைகள் என்றும் கவிஞர்களின் அதீத கற்பனை என்றும் நாம் ஒதுக்கி விடுகிறோம்
இந்த குணத்தினால்தான் பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து இருக்கின்றோம், புராணங்களும். இதிகாசங்களும் நடக்காதவற்றை நடக்கவே முடியாதவற்றை பற்றி பேசுகிறது என்று கருதி வந்த நமக்கு அவைகள் உண்மைக்கு புறம்பானவை அல்ல ஒரு காலத்தில் பூமியில் நடந்த சத்யமான சரித்திரங்களே என்பதை நிரூபிக்க பல சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன,
அமெரிக்க அனுப்பிய விண்கலம் ஒன்று கடலுக்கு அடியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் ஒன்று புதைந்து இருப்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது, இந்தப்படம் வானரங்கள் சேது பந்தனம் அமைத்தது வால்மீகியின் கற்பனை அல்ல நிஜமே என்பதை முகத்தில் அடித்தாற்போல் நமக்கு பறைசாற்றுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணனின் காலத்திற்கு பிறகு துவாரகையை கடல் கொண்டதாக பாகவதம் கூறுகிறது, பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துவாரகை கடலுக்கு அடியில் இருப்பதற்கான ஆதாரங்கள் குஜராத் மாநில கடல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இதே போன்று டில்லிக்கு அருகில் உள்ள குருஷேத்ராவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு கிடைத்த சில எலும்புகளில் அணுக்கதிர் பாய்ந்துள்ளதற்கான சாத்யககூறுகள் நிறைய இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இது அந்தக்கால அஸ்திர வல்லுநர்கள் அணு ஆற்றலை பயன்படுத்தும் விதத்தை திறம்பட அறிந்திருந்தார்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது பறக்கும் திறன் உடைய வாகனத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதிலும் அவ்வாகனங்களின் மூலமாக பல கிரகங்களுக்கு சென்று வந்தார்கள் என்பதிலும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை
மாக்ஸ்முல்லர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றில் நாம் இப்போது கண்டுபிடித்ததாகக் கூறும் நீராவி எஞ்சின், மின்சாரம், வயர்லெஸ் ஆகியவவைகள் வேதகாலத்திலேயே ரிஷிகளுக்கு நன்றாக தெரிந்து இருந்தது, வேதகாலத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டு வந்த பல சாதனங்களின் குறிப்புகள் அவற்றை பின்பற்றிய முறைகள் ஆகியவற்றை நாம் இழந்து விட்டோம் அவர்கள் கண்டுபிடித்து கையாளாத நவீன சாதனங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இருக்கிறார்.
மாக்ஸ் முல்லர் கண்மூடித்தனமான நம்பிக்கைவாதியோ தமது கொள்கைக்காக வலிய வாதிடுபவரோ அல்ல, மிகச்சிறந்த ஆராயச்சியாளர் வேதங்களில் பொதிந்துள்ள பல அரிய நுண்ணிய விஷயங்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்திய சாதனையாளர் எனவே அவர் கூற்றை ஆப்தவாக்கியமாக எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் நமது வேதங்களிலும் வெறுமென இறைவனை வழிபடுவதற்கான குறிப்புகள் மட்டும் இல்லை, விவசாயம் ரசாயனம் வானியல் பற்றியெல்லாம் தேவரிஷிகள் விரிவாக கூறிஉள்ளார்கள், ருக்வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்யாயம் ஆறாம் ஸ்லோகத்தில் காற்று நிரப்பிய ரதம் ஒன்றை வானவெளியில் நம் இஷ்டப்படி ஒட்டுவதற்கான வழிமுறை கூறப்பட்டுள்ளது
வேதம் குறிப்பிடும் காற்றடைத்த ரதங்கள் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என இருந்ததாகவும் பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன, ஆனால் இத்தனை விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நாளில்கூட சில அடுக்கு விமானங்கள் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை
ஷப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் மஹரிஷி தாம் எழுதிய யந்திர சர்வஸ்வம் என்ற நூலில் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவைகளைத் தயாரிக்கும் முறைப்பற்றியும் அவைகளின் செயல்திறன் பற்றியும் மிக விரிவாக கூறுகிறார், அவர் மட்டுமல்ல அகத்திய மஹரிஷியின் “சக்தி சூக்தம்” என்ற நூலும் ஈஸ்வரர் என்பவரின் “கௌதாமினி காலா” என்ற நூலும் ஷக்கானந்தரின் “வாயுதத்துப் பிரகரணம்” நாரதரின் “வைஸ்வனா தந்திரம்” மற்றும் “ஆகாச தந்திரம்” போன்ற நூல்களும் நாராயண மஹரிஷி என்பவரின் “விமானச் சந்திரிகா” “யந்திர கல்பம்” “யானபிந்து சேதாயன” “பிரதிபிகா வியோமயானர்ஹா” “பிரகாலம்” ஆகிய நூல்களும் ஆதிகால விமானங்கள் அதன் நுட்பங்ககள் பற்றி விரிவாக கூறுகிறது.
இதில் சிலவற்றை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதாலேயே பூமிவாசிகளின் அயல்கிரக பயணம் உண்மைதான் என்பதை உறுதியுடன் புரிந்து கொள்வீர்கள்.
மேலும் இதில் ஒரு விந்தையான உண்மையையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், விமானங்களைப் பற்றி மட்டும் அல்ல விமான ஓட்டிகள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் மனோபாவம் எத்தகைய திடத்துடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் பரத்வாஜ் மகிரிஷி இரண்டு அத்யாயங்களில் விரிவாக கூறுகிறார்.
விமான சாஸ்திரத்தில் கூறப்பட்ட 32 கொள்கைகளை நன்றாக கற்றுத் தேர்ந்தவனாகவும் யந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும் வானவீதியில் விமானத்தை செலுத்தவும் நிலையாக நிறுத்தவும் முன்னும் பின்னும் மேலும் கீழும் வட்டமாகவும் தலைகீழாகவும் விமானத்தை ஓட்டத் தெரிந்தவனாகவும் புதிய விமானத்தை உருவாக்கத் தெரிந்தவனாகவும் எந்த நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கும் சக்தி உள்ளவனாகவும் தனது அச்சத்தை பிறர் பார்க்கா வண்ணம் மறைக்கும் திறன் படைத்தவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறவது இன்றும் பொருந்தும் அல்லவா
இனி ரிஷிகள் குறிப்பிடும் விமானங்களைப் பற்றி சிறிது பார்ப்போம்
1. சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம் இது.
2. பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் இயல்புடைய விமானம்.
3. தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாக கொண்டு இயக்கக் கூடிய விமானம்.
4. கிதோகமா : சிகி. சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெரும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம்.
5.ஹம் சுவாகா : சேமித்து வைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அபாரத்திறன் படைத்த விமானம்.
6. தாரமுஹா : வானிலிருந்து பூமியை நோக்கிவரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம்.
7. மாணிவஹா : சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் விஜய. பாத்ரா. ஆஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களாலும் செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக கூடிய விமானம்.
8. மாராதசாஹா : இது வானில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம்.
இது தவிர “ஷக்டிங்கர்ப்பம்”, “விக்யுதம்”. “துருபதம்” “குண்டலிகமும்” போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் குறிப்பிடுகிறார்
இன்று செயற்கைக் கோள்களை அனுப்பி புவியின் கனிவளங்களை நாம் ஆராய்வதை போல் அன்றும் மாணிவாஹ விமானம். லோபகர்ப பிரசரணம். அமுஷவாஹா போன்ற விமானங்கள் வானமண்டலத்திலேயே நிலையாக இன்று பூமியில் ஏற்படும் சீதோஷன மாற்றங்கள் கணிம வகைகள் இருக்கும் இடங்கள் பற்றியும் தகவல்கள் அரசகர்களும் தந்ததாகவும் நாரத மஹரிஷி எழுதிய வைஸ்னா தந்திரம் என்ற நூலில் குறிப்பு இருக்கிறது
இது மட்டுமல்லாது ஒரு விமானத்தில் இருப்பவன் பேசும் ஒலி அதிர்வுகளை வைத்து அடுத்த விமனாத்திற்கு தகவல் சொல்லும் “அநுக்கிரம ஷாபிதா” என்ற கருவி இருந்ததாக கௌதாமினி மஹரிஷி குறிப்பிடுகிறார்.
“ரூப கார்ஷண ரகசியம்” என்ற கருவி எதிர் விமானத்திற்குள் ஒளிக்கதிர்கள் பிரயோகித்து அந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் சாதனங்கள் அங்கே இருப்பவர்களின் வண்ண ஆடைகள் ஆயுதங்கள் போன்றவற்றை மிகத்துல்லியமாக தாம் பொருத்தப்பட்டிருக்கும் விமானத்தின் தலைமையகத்திடம் தெரிவித்து விடும் என்று நாராயண மகரிஷி தமது நூலில் கூறுகிறார்
“தீஷமபதி” என்ற கருவி எதிரிகள் விமானத்தை கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே “சதபிதா” என்ற விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள “அபஸ்மாராதாபம்” என்ற ஆயுதப் பகுதிக்கு தகவல் அனுப்பும் என்றும் உடனே அந்த அபஸ்மரா கருவி “ஷர்ஷன்” என்ற ஏவுகணையை 87 டிகிரி வெப்பதில் வெளியிட்டு எதிரி விமானத்தை அழித்து விடுமென்றும் “திக்பிர தர்ஷண” ரகசியம் என்ற நூல் கூறுகிறது
இன்னும் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பழமையான ஏட்டுச் சுவடிகளிலும் கிரகந்த நூல்களிலும் காணக் கிடைக்கின்றன
பழங்கால விமான இயலைப் பற்றிய இத்தனை நூல் ஆதாரங்கள் கிடைக்கின்றனவே நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட விமானங்களோ அல்லது அதன் கருவிகளோ ஒன்று கூட இன்றைய ஆதாரத்திற்கு இல்லையா? என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் எழக்கூடும்
அதற்கான பதில் எந்த புறக்கருவிகளுமே இன்றுவரை நம்மிடம் கிடைக்கவில்லை என்பதுதான் அதற்கு காரணம் அவைகள் ஏதோ ஒரு மஹாப் பிரளயத்தினால் அழிந்து இருக்க வேண்டும் அல்லது அவைகள் உருவாக்கினவர்களே எந்த காரணத்தின் அடிப்படையிலேயோ அழித்து இருக்க வேண்டும்
பின்னர் நூல் ஆதாரம் மட்டும் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அக்கால நூல்கள் எதுவுமே எழுதப்படவில்லை காலங்காலமாக குருமுகமாக மனப்பாடம் செய்யப்பட்டு வந்திருக்கிறது, அதன் பின்னரே தற்போது கிடைக்கின்ற நூல்கள் எழுத்து வடிவம் பெற்று இருக்கிறது இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் , பல புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்தில் ஐயமில்லை
அந்த மந்திரத்தில் எனக்கு நல்ல பயிற்சிகளையும் அனுபவமும் குருஅருளால் உண்டு என்றாலும் அதை பகிரங்கப்படுத்த நான் விரும்பவில்லை,
இதை நான் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம் உண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன என்பதாலேயோ குருமார்கள் கூறுகிறார்கள் என்பதாலேயோ நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை அதை நடைமுறைப்படுத்தி முழுமையான அனுபவம் பெற்று திருப்தியுள்ள பின்னரே ஏற்றுக்க கொள்வது என் வழக்கம்
இதன் அடிப்படையில் ஆகாசாகாமினியை பிரயோகப்படுத்தி நான் சுயமாக அனுபவம் பெற்றதனால் சூட்சம சரீரத்தில் அயல்பிரதேச பயணம் என்பது அப்பழுகற்ற உண்மை என்பதை உறுதிப்பட என்னால் கூற இயலும்.
அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் தேடுவதில் முனைப்பாக இருக்கும் நமது ஆராய்ச்சியாளர்கள். நாம் அயல் கிரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இன்னும் பயன் உடையதாக பல புதிய ஆதாரங்களை பெற்றுத் தருவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
நாம் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்கûப் பற்றி ஆராய்வதில் முனைவதில்லை, நமக்கு அப்பால் இருக்கும் விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்.
செவ்வாய் கிரகத்தைப் பற்றி தெரிந்த அளவிற்கு நம் பூமியைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருப்போமானால் இன்றை இயற்கை பேரழிவுகளை எதிர் கொள்வதற்கான சக்தி நமக்கு கிடைத்திருக்கும்
ஆனால் நம் முன்னோர்கள் எந்தவித விஞ்ஞான உபகரணமும் இன்றி நம்மைச் சுற்றி உள்ள பொருட்களை ஆளுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் வழியில் நாம் சென்றால் பூமியைப் பாதுகாப்பது மட்டுமன்றி அயல் கிரகங்களிலும் நமது குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கலாம்.
2 comments:
borodIt is eccentric. This sort of things were forgotton and declared as an imagination and not a existing thing by our so called intellectuals and Nasthiks. Thank you for this information. We want further details regarding the Rishi Garthama with his wife "Devahoothi" lived in the Vimana for more than 100 years without visiting the earth. Rajaganapathy
Certainly the truth here is debatable. Even if this's called imagination then surely a superior version of technical imagination this could be. However, the people who invented such fantastic inventions, never invented a reliable recording material such as paper or some thing etc.. to retain the so called info is also debatable. Instead they relied & practised 'varnashrama dharma' to keep in memory of certain group is a shame. yes.. this western inventions are really west but is available for all to think upon and improve upon. For every single invention of West there are many debates, documents, discussions and many experimental research references are available even today. But all we do is to recall our 'puraanaas' and happy to say we already know all these things etc.. showing with our empty hands to our upcoming generation.
Post a Comment